பாடம் : 45
தண்ணீரை விரயமாக்குதல்.
யா அல்லாஹ்! நான் சுவனத்தில் நுழைந்ததும் அதன் வலப்பக்கத்தில் எனக்கு ஒரு வெள்ளைமாளிகையை அருள்வாயாக என உன்னிடம் வேண்டுகிறேன் என்று தனது மகன் பிரார்த்தனை செய்வதை செயியுற்ற அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி) அவர்கள் தமது மகனை நோக்கி, என்னருமை மகனே! நீ அல்லாஹ்வின் சுவனத்தை கேள். (பிரார்த்தனையில் வரம்பு மீறாதே) ஏனெனில் சுத்தம் செய்வதிலும் பிரார்த்தனை புரிவதிலும் வரம்பு மீறும் ஒரு கூட்டம் எனது இந்த சமுதாயத்தில் இனி உருவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என அறிவுரை வழங்கினார்கள்.
(குறிப்பு: இது அஹ்மது, இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அப்துல்லாஹ் இப்னு முகப்பல் அவர்களின் மகன் என்பவர் யார் என தெரியாதவர்.)
(அபூதாவூத்: 96)45- بَابُ الْإِسْرَافِ فِي الْمَاءِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَعَامَةَ
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، سَمِعَ ابْنَهُ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْقَصْرَ الْأَبْيَضَ، عَنْ يَمِينِ الْجَنَّةِ إِذَا دَخَلْتُهَا، فَقَالَ: أَيْ بُنَيَّ، سَلِ اللَّهَ الْجَنَّةَ، وَتَعَوَّذْ بِهِ مِنَ النَّارِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ فِي هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ يَعْتَدُونَ فِي الطَّهُورِ وَالدُّعَاءِ»
AbuDawood-Tamil-96.
AbuDawood-Shamila-96.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்