தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-112

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலீ (ரலி) அவர்கள் சுப்ஹு தொழுது விட்டு (கூபாவிலுள்ள இடமான) ரஹ்பா விற்கு ‎சென்று தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். அப்போது ஒரு சிறுவர் தண்ணீர் ‎பாத்திரத்தையும், கை கழுவும் தட்டையும் கொண்டு வந்தார். அவர்கள் தமது வலது ‎கையினால் பாத்திரத்தைப் பிடித்துக் கொண்டு தமது இடது கைக்கு தண்ணீர் ஊற்றி தமது ‎இரு முன்கை களையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலது கையை ‎பாத்திரத்தில் நுழைத்து மூன்று தடவை வாய் கொப்பளித் தார்கள். மும்முறை நாசிக்கு நீர் ‎செலுத்தி மூக்கை சுத்தம் செய்தார்கள் என்று அறிவித்துவிட்டு (மேற்கண்ட) அபூ அவானா ‎ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவிக்கிறார். பிறகு தலையின் முன் நெற்றி யிலிருந்து ‎தலையின் பின்புறம் வரை மஸஹ் செய்தார்கள். பின்னர் மேற்கண்ட ஹதீஸைப் ‎போன்றே அறிவிக்கிறார்.‎

‎(குறிப்பு : நஸயீ , திர்மிதீ, அஹ்மது ஆகியவற்றிலும் பதிவாகியுள்ளது.)‎

(அபூதாவூத்: 112)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَلْقَمَةَ الْهَمْدَانِيُّ، عَنْ عَبْدِ خَيْرٍ، قَالَ

صَلَّى عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ الْغَدَاةَ، ثُمَّ دَخَلَ الرَّحْبَةَ فَدَعَا بِمَاءٍ فَأَتَاهُ الْغُلَامُ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ، قَالَ: «فَأَخَذَ الْإِنَاءَ بِيَدِهِ الْيُمْنَى، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى، وَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ فَمَضْمَضَ ثَلَاثًا وَاسْتَنْشَقَ ثَلَاثًا»، ثُمَّ سَاقَ قَرِيبًا مِنْ حَدِيثِ أَبِي عَوَانَةَ، قَالَ: «ثُمَّ مَسَحَ رَأْسَهُ مُقَدَّمَهُ وَمُؤَخِّرَهُ مَرَّةً» ثُمَّ سَاقَ الْحَدِيثَ نَحْوَهُ


AbuDawood-Tamil-112.
AbuDawood-Shamila-112.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.