தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-121

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் திருதூதர் (ஸல்) அவர்களுக்கு உலூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டதும், அவர்கள் உலூச் செயயத் துவங்கி தமது முன்னங்கைகளை மூன்று முறையும், தமது முகத்தை மூன்று முறையும், முழங்கைகளை மூன்று முறைகளும் கழுவினார்கள். பின்பு மூன்று முறை வாய் கொப்பளித்து, நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்தார்கள். பிறகு தலைக்கு மஸஹ் செய்து இரு காதுகளின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் மஸஹ் செய்தார்கள் என மிக்தாம் பின் மஃதீகரிப் அல்கின்தீய்யி (ரலி) அறிவிக்கிறார்கள். 

(குறிப்பு: அஹ்மதிலும் இது இடம் பெற்றுள்ளது. இப்னுமாஜாவில் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 121)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا حَرِيزٌ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَيْسَرَةَ الْحَضْرَمِيُّ، سَمِعْتُ الْمِقْدَامَ بْنَ مَعْدِي الْكِنْدِيَّ، قَالَ

«أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا»


AbuDawood-Tamil-121.
AbuDawood-Shamila-121.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.