தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1587

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43 ஹரம்-புனித எல்லையின் சிறப்பு.

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே கூறுக:) இந்த ஊரை எவன் கண்ணியப்படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவனாக இருக்கும்படியும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். (27:91)

நாம் அவர்களை அபயமளிக்கும் புனித பூமியில் (பாதுகாப்பாக) வசிக்கும்படி செய்யவில்லையா?அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனி வர்க்கமும் நம்மிடமிருந்து ஆகாரமாகக் கொண்டு வரப்படுகிறது;எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள் (28:57). 

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, ‘அல்லாஹ் இந்த ஊரைப் புனிதமானதாக்கியுள்ளான். இவ்வூரிலுள்ள முட்கள் பிடுங்கப்படக் கூடாது; இங்கே வேட்டையாடப்படும் பிராணிகளை விரட்டக் கூடாது; இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களை அதை (மக்களுக்கு) அறிவிப்பவரைத் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது!’ எனக் கூறினார்கள்.
Book : 25

(புகாரி: 1587)

بَابُ فَضْلِ الحَرَمِ

وَقَوْلِهِ تَعَالَى: {إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَذِهِ البَلْدَةِ الَّذِي حَرَّمَهَا، وَلَهُ كُلُّ شَيْءٍ، وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ المُسْلِمِينَ} [النمل: 91]

وَقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا، وَلَكِنَّ أَكْثَرَهُمْ لاَ يَعْلَمُونَ} [القصص: 57]

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ: «إِنَّ هَذَا البَلَدَ حَرَّمَهُ اللَّهُ لاَ يُعْضَدُ شَوْكُهُ، وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ، وَلاَ يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلَّا مَنْ عَرَّفَهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.