அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உலூவில்) மஸஹ் செய்யும் போது கைகள் பிடரியின் ஆரம்பப்பகுதியை அடையும் வரை ஒரு தடவை தலைக்கு மஸஹ் செய்யக் கண்டேன் என தல்ஹாபின் முஸர்ரிஃப் அவர்கள் தமது பாட்டனாரிடமிருந்து தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார்.
இந்த ஹதீஸை முஸத்தத் அவர்கள் அறிவிக்கும் போது அவர்கள் தன் தலைக்கு அதன் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை மஸஹ் செய்து முடித்து இறுதியில் தன் கைகளை இரு காதுகளின் கீழ்புறமாக வெளிக்கொணர்ந்தனர் என அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸை நான் யஹ்யா பின் ஸயீது அல்கத்தான் அவர்களிடம் எடுத்துரைத்தபோது இதை அவர்கள் நிராகரிக்கத்தக்கது (முன்கரான ஹதீஸ்) என்று கூறிவிட்டார்கள் எனவும் முஸத்தத் தெரிவிக்கிறார்.
இமாம் அபூதாவூது குறிப்பிடு கின்றார்கள் : இமாம் சுஃப்யான் பின் உயைனர் அவர்கள் இதை நிராகரிக்கத் தக்கது என்று கூறியதாக ஹதீஸ்கலை வல்லுனர்கள் கருதுகிறார்கள் என்றும் தல்ஹா அவர்கள் தமது தந்தை வாயிலாக பாட்டனார் மூலம் அறிவிக்கின்ற இத்தொடரை இது ஒரு அறிவிப்புத் தொடரே இல்லை என்று விமர்சிப்பதாகவும் இமாம் அஹ்மது பின் ஹன்பல் கூறக்கேட்டேன்.
(குறிப்பு : இது அஹ்மத் என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது. தல்ஹா அவர்களின் தந்தை முஸர்ரிஃப் அவர்கள் ஹதீஸ் கலையில் யாரென்றே அறியப்படாதவர். மேலும் இத்தொடரில் இடம் பெறும் லைஸ்பின் அபீஸலீம் பலவீனமானவர். இப்னு ஹிப்பான் அவர்கள் இவரைப்பற்றிக் குறிப்பிடும் போது இவர் அறிவிப்பாளர் தொடரைக் குழப்பி நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை அவர்கள் கூறியதாக சொல்லி நல்ல அறிவிப்பாளர் பெயரை பயன் படுத்தி அவர்கள் கூறாததைக் கூறிவிடுவார் எனக் குறிப்பிடுகிறார்கள். பிடரியை மஸஹ் செய்வதற்கு ஆதாரம் அறவே இல்லை என இதன் மூலம் அறியலாம்.)
(அபூதாவூத்: 132)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، وَمُسَدَّدٌ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ لَيْثٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ
«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ رَأْسَهُ مَرَّةً وَاحِدَةً حَتَّى بَلَغَ الْقَذَالَ – وَهُوَ أَوَّلُ الْقَفَا، وَقَالَ مُسَدَّدٌ – مَسَحَ رَأْسَهُ مِنْ مُقَدَّمِهِ إِلَى مُؤَخَّرِهِ حَتَّى أَخْرَجَ يَدَيْهِ مِنْ تَحْتِ أُذُنَيْهِ»، قَالَ مُسَدَّدٌ: فَحَدَّثْتُ بِهِ يَحْيَى فَأَنْكَرَهُ
قَالَ أَبُو دَاوُدَ: وسَمِعْت أَحْمَدَ، يَقُولُ: «إِنَّ ابْنَ عُيَيْنَةَ زَعَمُوا أَنَّهُ كَانَ يُنْكِرُهُ، وَيَقُولُ إِيشْ هَذَا طَلْحَةُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ»
AbuDawood-Tamil-132.
AbuDawood-Shamila-132.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்