தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-158

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உபைய் பின் இமாரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நான் இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்யலாமா? என்று வினவியதும் அவர்கள் ஆம், ஒரு நாள் (முழுவதும் செய்யலாம்) என்றார்கள். இரு நாட்கள் செய்யலாமா? என்று அவர் வினவியதும் நபி (ஸல்) அவர்கள் இரு நாட்கள் செய்யலாம் என்றனர். மூன்று நாட்கள் செய்யலாமா? என்று அவர் கேட்க நபி (ஸல்) அவர்கள் ஆம் நீர் விரும்பிய நாட்கள் வரை என்று பதிலளித்தார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரு கிப்லாக்களை (பைத்துல் முகத்தஸ், கஃபா) முன்னோக்கி தொழுதவர் என்று உபை பின் இமாரா (ரலி)யைப் பற்றி இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் அய்யூப் குறிப்பிடுகின்றார். 

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : இப்னு அபூமர்யம் என்பார் அறிவிக்கும் ஹதீஸில் உபைபின் இமாரா (ரலி) ஏழு என்ற எண்ணிகையை அடைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் உனக்கு தோன்றிய நாட்கள் வரை என்று பதிலளித்தார்கள் என்று அறிவிக்கின்றார். 

மேலுள்ள ஹதீஸில் முதல் அறிவிப்பாளரான யஹ்யா பின் அய்யூப் என்பாரின் அறிவிப்பாளர் தொடரில் கருத்து வேற்றுமை காணப்படுவதோடு இவர் ஹதீஸில் வல்லுனராக இல்லை.

(அபூதாவூத்: 158)

حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ بْنِ طَارِقٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَزِينٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ، عَنْ أَيُّوبَ بْنِ قَطَنٍ، عَنْ أُبَيِّ بْنِ عِمَارَةَ، قَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ: وَكَانَ قَدْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْقِبْلَتَيْنِ

أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: يَوْمًا؟ قَالَ: «يَوْمًا»، قَالَ: وَيَوْمَيْنِ؟ قَالَ: «وَيَوْمَيْنِ»، قَالَ: وَثَلَاثَةً؟ قَالَ: «نَعَمْ وَمَا شِئْتَ»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ ابْنُ أَبِي مَرْيَمَ الْمِصْرِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَزِينٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسِيٍّ، عَنْ أُبَيِّ بْنِ عِمَارَةَ قَالَ فِيهِ: حَتَّى بَلَغَ سَبْعًا، قَالَ: رَسُولُ [ص:41] اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، وَمَا بَدَا لَكَ»، قَالَ أَبُو دَاوُدَ: وَقَدِ اخْتُلِفَ فِي إِسْنَادِهِ وَلَيْسَ هُوَ بِالْقَوِيِّ، وَرَوَاهُ ابْنُ أَبِي مَرْيَمَ، وَيَحْيَى بْنُ إِسْحَاقَ السَّيْلَحِينِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَيَّوبَ وَقَدِ اخْتُلِفَ فِي إِسْنَادِهِ


AbuDawood-Tamil-158.
AbuDawood-Shamila-158.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.