தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1594

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48 கஅபாவுக்குத் திரையிடல். 

 அபூ வாயில் அறிவித்தார்.

நான் ஷைபாவுடன் கஅபாவினுள் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷைபா ‘இந்த இடத்தில் உமர்(ரலி) அமர்ந்து ‘இத்திரையில் பதிக்கப்பட்டுள்ள தங்கம், வெள்ளி ஆகியவற்றைப் பங்கு வைத்துவிடலாம் எனத் தீர்மானித்துவிட்டேன்’ என்றார்கள்.

அப்போது நான் அவர்களிடம் ‘தங்களின் தோழர்கள் (நபி(ஸல்), அபூ பக்ர்(ரலி) இருவரும் இவ்வாறு செய்யவில்லையே’ எனக் கூறினேன். அதற்கு ‘அந்த இருவரும்தான் நான் பின்பற்றுவதற்கு ஏற்ற மனிதர்கள்’ என உமர்(ரலி) சொன்னார்கள்’ என்று கூறினார்கள்.
Book : 25

(புகாரி: 1594)

بَابُ كِسْوَةِ الكَعْبَةِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: جِئْتُ إِلَى شَيْبَةَ، ح وحَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ

جَلَسْتُ مَعَ شَيْبَةَ عَلَى الكُرْسِيِّ فِي الكَعْبَةِ، فَقَالَ: لَقَدْ جَلَسَ هَذَا المَجْلِسَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: «لَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أَدَعَ فِيهَا صَفْرَاءَ وَلاَ بَيْضَاءَ إِلَّا قَسَمْتُهُ»

 قُلْتُ: إِنَّ صَاحِبَيْكَ لَمْ يَفْعَلاَ، قَالَ: «هُمَا المَرْءَانِ أَقْتَدِي بِهِمَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.