பாடம் : 79
இரத்தம் வெளிப்படுவதால் உளூ நீங்குமா ?
தாது ரிகாஃ என்ற போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றோம். (எங்கள் தோழர்களில்) ஒருவர் இணை வைப்பாளர்களின் ஒருவனின் மனைவியை கொன்று விட்டார். அவளது கணவன் முஹம்மதுடைய தோழர்களில் எவரையேனும் கொல்லாமல் ஓயப்போவ தில்லை என்று சத்தியம் செய்து கொண் டான். எனவே அவன் நபி (ஸல்) அவர் களின் அடிச்சுவற்றை தொடரலானான். நபி (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கினார் கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நம்மை காவல் புரிபவர்கள் யார் என வினவினார் கள். முஹாஜிர்களில் ஒருவரும் அன்சாரி களில் ஒருவரும் பதிலளித்ததும். நீங்கள் இருவரும் கணவாயின் வாயிலில் (காவல்) இருந்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்விருவரும் கணவாயின் வாயிலுக்குச் சென்றதும். முஹாஜிர் தோழர் படுத்துக்கொண்டார். அன்சாரித் தோழர் தொழத் துவங்கினார். (சபதம் செய்த)அந்த மனிதன் வந்து விட்டான். அவன் (தொழுகின்ற) அவரது தோற்றத்தைக் கண்டதும் அக்கூட்டத்தின் காவலாளி என்று வினங்கிக் கொண்டான். அவரை நோக்கி அவன் அம்பு எய்தான். அதை அவர்மேல் (குறி தவறாது)விழச் செய் தான். அதை அவர் கழற்றி விட்டார். இவ் வாறு அவன் மூன்று அம்புகளை அவரை நோக்கி எறியும்வரை (அவர் கழற்றி விட்டார்). பிறகு ருகூவு செய்து, சஜ்தா செய்தார். பிறகு, அவரது தோழர் தூங்கி எழுந்தார். அவர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்று அம்மனிதன் புரிந்து கொண்டதும் பயந்து ஓடிவிட்டான். அன்சாரி தோழரின் ரத்தக் காட்சியை முஹாஜிர் தோழர் கண்ட போது, சுபுஹா னல்லாஹ்(அல்லாஹ் தூய்மையானவன்). அவன் அம்பு எய்த ஆரம்பத்திலேயே என்னை எழுப்பி இருக்கக்கூடாதா? என்று வினவினார். அதற்கு அவர் நான் ஓதிக் கொண்டிருந்த குர்ஆனுடைய அத்தியாயத் தில் ஆழ்ந்துவிட்டேன். அதை நான் துண்டிக்க விரும்பவில்லை என்று பதில் சொன்னார்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).
(அபூதாவூத்: 198)79- بَابُ الْوُضُوءِ مِنَ الدَّمِ
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ، عَنْ عَقِيلِ بْنِ جَابِرٍ، عَنْ جَابِرٍ، قَالَ
خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَعْنِي فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ – فَأَصَابَ رَجُلٌ امْرَأَةَ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ، فَحَلَفَ أَنْ لَا أَنْتَهِيَ حَتَّى أُهَرِيقَ دَمًا فِي أَصْحَابِ مُحَمَّدٍ، فَخَرَجَ يَتْبَعُ أَثَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا، فَقَالَ: مَنْ رَجُلٌ يَكْلَؤُنَا؟ فَانْتَدَبَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: «كُونَا بِفَمِ الشِّعْبِ»، قَالَ: فَلَمَّا خَرَجَ الرَّجُلَانِ إِلَى فَمِ الشِّعْبِ اضْطَجَعَ الْمُهَاجِرِيُّ، وَقَامَ الْأَنْصَارِيُّ يُصَلِّ، وَأَتَى الرَّجُلُ فَلَمَّا رَأَى شَخْصَهُ عَرَفَ أَنَّهُ رَبِيئَةٌ لِلْقَوْمِ، فَرَمَاهُ بِسَهْمٍ فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ، حَتَّى رَمَاهُ بِثَلَاثَةِ أَسْهُمٍ، ثُمَّ رَكَعَ وَسَجَدَ، ثُمَّ انْتَبَهَ صَاحِبُهُ، فَلَمَّا عَرَفَ أَنَّهُمْ قَدْ نَذِرُوا بِهِ هَرَبَ، وَلَمَّا رَأَى الْمُهَاجِرِيُّ مَا بِالْأَنْصَارِيِّ مِنَ الدَّمِ، قَالَ: سُبْحَانَ اللَّهِ أَلَا أَنْبَهْتَنِي أَوَّلَ مَا رَمَى، قَالَ: كُنْتَ فِي سُورَةٍ أَقْرَؤُهَا فَلَمْ أُحِبَّ أَنْ أَقْطَعَهَا
AbuDawood-Tamil-198.
AbuDawood-Shamila-198.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்