அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இஷாவை (உறக்கத்தினால்) தங்களது தலைகள் சரிந்து விழும் அளவுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு, அவர்கள் உலூச் செய்யாமலேயே தொழுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் (இஷா தொழுகையை எதிர்பார்த்து) தலைகள் சரிந்து விழும் வரை தூங்கிக் கொண்டிருப்போம் என்று அனஸ் (ரலி) கூறியதாக கதாதா என்பார் கூடுதலாக அறிவிக்கின்றார்.
இந்த ஹதீஸை இப்னு அபீ அரூபா என்பவர் கதாதா இடமிருந்து வேறோரு உரைநடையில் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 200)حَدَّثَنَا شَاذُّ بْنُ فَيَّاضٍ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ
«كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْتَظِرُونَ الْعِشَاءَ الْآخِرَةَ حَتَّى تَخْفِقَ رُءُوسُهُمْ، ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ»
قَالَ أَبُو دَاوُدَ: زَادَ فِيهِ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: كُنَّا نَخْفِقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَوَاهُ ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ بِلَفْظٍ آخَرَ
AbuDawood-Tamil-200.
AbuDawood-Shamila-200.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்