தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-245

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் நபி (ஸல்) அவர்களுக்கு கடமையான குளிப்பை நிறைவேற்ற தண்ணீர் எடுத்து வைத்தேன். அவர்கள் பாத்திரத்தை தனது வலது கையில் சாய்த்து (ஊற்றி) அதை இரு தடவைகளோ அல்லது மூன்று தடவைகளோ கழுவினார்கள். பிறகு தனது மறைவு உறுப்பில் (நீர்) ஊற்றி தன் மறைவு உறுப்பை இடது கையினால் கழுவினார்கள். பிறகு தனது கையை தரையில் தேய்த்து அதையும் கழுவினார்கள். பிறகு வாய்க் கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தினார்கள். பிறகு தனது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். பிறகு தனது தலைக்கும் தனது உடலுக்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு குளிக்கும் இடத்தை விட்டும் கொஞ்சம் தள்ளி நின்று தனது இரு கால்களையும் கழுவினார்கள். அவர்களுக்கு நான் (துடைப்பதற்கு) துண்டு கொடுத்தேன். அவர்கள் அதை எடுக்கவில்லை. அவர்கள் தனது உடலிலிருந்து தண்ணீரை உதறி விட்டார்கள்.

அறிவிப்பவர் : அன்னை மைமூனா (ரலி) அவர்கள்

(இதன் அறிவிப்பாளர் அஃமத் கூறுகின்றார்) இந்த (துடைக்கவில்லை என்ற) செய்தியை இப்றாகீம் அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர் (நபித்தோழர்கள்) துண்டைக் கொண்டு துடைப்பதை தவறாக கருதவில்லை. ஆனால் வழக்கமாக செய்வதை விரும்பவில்லை என்று பதிலளித்தார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

முஸத்தத் தெரிவிக்கின்றனர்,

நான் (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் தாவூத் அவர்களிடம் வழக்கமாக செய்வதற்காகத்தான் இதை அவர்கள் விரும்பவில்லையா என்று வினவியபோது அது அப்படித்தான் என்று சொன்னார்கள் எனினும் எனது இந்த நூலில் இவ்வாறு (ஹதீஸ் மட்டும்) தான் உள்ளது.

(அபூதாவூத்: 245)

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، عَنْ خَالَتِهِ مَيْمُونَةَ قَالَتْ

«وَضَعْتُ للنبى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فَأَكْفَأَ الْإِنَاءَ عَلَى يَدِهِ الْيُمْنَى، فَغَسَلَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، ثُمَّ صَبَّ عَلَى فَرْجِهِ فَغَسَلَ فَرْجَهُ بِشِمَالِهِ، ثُمَّ ضَرَبَ بِيَدِهِ الْأَرْضَ فَغَسَلَهَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ صَبَّ عَلَى رَأْسِهِ وَجَسَدِهِ، ثُمَّ تَنَحَّى نَاحِيَةً فَغَسَلَ رِجْلَيْهِ، فَنَاوَلْتُهُ الْمِنْدِيلَ فَلَمْ يَأْخُذْهُ وَجَعَلَ يَنْفُضُ الْمَاءَ عَنْ جَسَدِهِ» فَذَكَرْتُ ذَلِكَ لِإِبْرَاهِيمَ فَقَالَ: «كَانُوا لَا يَرَوْنَ بِالْمِنْدِيلِ بَأْسًا، وَلَكِنْ كَانُوا يَكْرَهُونَ الْعَادَةَ»

قَالَ أَبُو دَاوُدَ: قَالَ مُسَدَّدٌ: قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ دَاوُدَ: كَانُوا يَكْرَهُونَهُ لِلْعَادَةِ؟ فَقَالَ: هَكَذَا هُوَ، وَلَكِنْ وَجَدْتُهُ فِي كِتَابِي هَكَذَا


AbuDawood-Tamil-245.
AbuDawood-Shamila-245.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.