தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-284

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 109

அதிக இரத்தப்போக்குள்ளவள் வழக்கமான மாதவிடாய் ஆரம்ப மாகிவிட்டால் தொழமாட்டாள்.

புஹய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (வந்து), “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் அமைப்பு கெட்டுவிட்டது. தொடர்ந்து இரத்தம் வந்துகொண்டே இருக்கிறது” என்பதைக் குறித்துக் கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், (இதை நபியவர்களிடம் கேட்டார் கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முன்பு – அவளின் மாத விடாய் சீராக இருந்தபோது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும் நாள்களைக் கணக்கிட்டு அவற்றையே வழக்கமான மாதவிடாய் நாள்களாய்க் கருத வேண்டும்.
அந்த நாள்களில் தொழுகை யைத் தவிர்த்து விடவேண்டும். பின்னர் குளித்துவிட்டு அதிகப் படியான துணியால் உள்ளாடை

…..

பாடம் : 110

மாதவிடாய் வந்ததும் தொழுகையை விட வேண்டும் என்று வரும் அறிவிப்பு.

மாதவிடாய் (இரத்தம்) கெட்டு போய், இரத்தப்போக்கு ஏற்பட்டு விட்ட ஒரு பெண் தொடர்பாக ஆயிஷா (ரலி)யிடம் ஒரு பெண் வினவினார். (இதுபற்றி ஆயிஷா (ரலி) அறிவித்ததாவது) 

மாதவிடாய் சரியாக வந்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு மாதமும் அந்த பெண்தான் மாதவிடாய் ஆகும் காலஅளவுக்கு (தொழாமல்) காத்திருந்து அந்த நாட்கள் அளவை கணக்கிட்டு கொள்வாளாக! பிறகு அந்நாட்களில் அல்லது அந்நாட்கள் அளவுக்கு தொழுகையை விட்டுவிட்டு பிறகு குறித்து ஒரு துணியைக் கட்டி கொண்டு தொழுவாராக! என அப்பெண்மணிக்கு கட்டளையிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.

இந்த தொடரில் இடம் பெறும் அபூ அகீல் என்பவர் யஹ்யா பின் முதவக்கில் ஆவார். இவரது ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது என ஹாபிழ் முன்திரி கூறுகின்றார்.

(அபூதாவூத்: 284)

110-بَابُ مَنْ قَالَ إِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ تَدَعُ الصَّلَاةَ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، عَنْ بُهَيَّةَ قَالَتْ

سَمِعْتُ امْرَأَةً تَسْأَلُ عَائِشَةَ عَنِ امْرَأَةٍ فَسَدَ حَيْضُهَا وَأُهْرِيقَتْ دَمًا، فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ آمُرَهَا «فَلْتَنْظُرْ قَدْرَ مَا كَانَتْ تَحِيضُ فِي كُلِّ شَهْرٍ وَحَيْضُهَا مُسْتَقِيمٌ، فَلْتَعْتَدَّ بِقَدْرِ ذَلِكَ مِنَ الْأَيَّامِ، ثُمَّ لِتَدَعِ الصَّلَاةَ فِيهِنَّ أَوْ بِقَدْرِهِنَّ، ثُمَّ لِتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ، ثُمَّ لِتُصَلِّ»


Abu-Dawood-Tamil-245.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-284.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.