தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-292

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் உம்முஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி)க்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவரை நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்கும்படி கட்டளையிட்டார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் என அறிவித்து இதன் அறிவிப்பாளர் தொடர்ந்து இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்.

ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)க்கு உதிரப்போக்கு ஏற்பட்டு விட்டது. அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் நீ குளித்துக்கொள் என்று சொன்னார்கள் என ஆயிஷா (ரலி) அறிவித்து இதன் அறிவிப்பாளர் இந்த ஹதீஸை தொடர்ந்து அறிவிக்கின்றார்.

ஆயிஷா (ரலி) – உர்வா – ஜுஹ்ரி – சுலைமான் வழியாக இந்த ஹதீஸை அபூவலீத் அத்தாலிஸி அறிவிக்கின்றார். ஆனால் நான் இந்த ஹதீஸை அவரிடமிருந்து செவியுறவில்லை என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள். 

சுலைமான் பின் கஸீர் மூலம் இந்த ஹதீஸை அப்துஸ்ஸமத் அறிவிக்கும் போது நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்து கொள் என்று (கூறியதாக) அறிவிக்கின்றார். ஆனால் இது அப்துஸ்ஸமதின் கற்பனைதான். அபூவலீதின் அறிவிப்புதான் (சரியான) சொல்லாகும் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்.

(அபூதாவூத்: 292)

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدَةَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ

أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ اسْتُحِيضَتْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَمَرَهَا بِالْغُسْلِ لِكُلِّ صَلَاةٍ»، وَسَاقَ الْحَدِيثَ

قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ وَلَمْ أَسْمَعْهُ مِنْهُ، عَنْ سُلَيْمَانَ بْنِ كَثِيرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: اسْتُحِيضَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْتَسِلِي لِكُلِّ صَلَاةٍ»، وَسَاقَ الْحَدِيثَ. قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ عَبْدُ الصَّمَدِ، عَنْ سُلَيْمَانَ بْنِ كَثِيرٍ قَالَ: «تَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ». قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا وَهْمٌ مِنْ عَبْدِ الصَّمَدِ، وَالْقَوْلُ فِيهِ قَوْلُ: أَبِي الْوَلِيدِ


AbuDawood-Tamil-292.
AbuDawood-Shamila-292.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.