தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-301

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 114

ரத்தப் போக்குள்ளவள் ஒரு நாளைக்கு ஒரு முறை குளித்தல்.

கஃகாஃ, ஸைது பின் அஸ்லம் ஆகிய இருவரும் அபூபக்கர் (ரலி) அவர்களின் அடிமையான சுமைய்யீ என்பவரை சயீத் பின் அல்முஸய்யிப் (ரலி) யிடம் சூதக ரத்தப் போக்குள்ளவர் எவ்வாறு குளிக்க வேண்டும் என்று கேட்டு வருமாறு அனுப்பி வைத்தார்கள். அப்போது சயீத், அப்படிப் பட்டவர் ழுஹ்ருக்கு லுஹர் குளிக்க வேண்டும். (அதாவது இன்று லுஹர் – நண்பகல் நேரத்தில் குளித்தால் அவர் குளிப்பு மறுநாள் லுஹர் வரை செல்லுபடியாகும்.) மேலும் அவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும். அவருக்கு ரத்தம் மிகைத்து வருமானால் பஞ்சிட்ட ஆடையை கொண்டு துணியில் இறுக்கிக் கட்டிக் கொள்ளவும் என்று பதிலளித்தார்கள் என்று சுமைய்யி அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இப்னு உமர் (ரலி) யிடம் இருந்தும் அனஸ் பின் மாலிக் (ரலி) யிடம் இருந்தும் அவர் ழுஹருக்கு லுஹர் குளிக்க வேண்டும் என்றே அறிவிக்கப் படுகிறது. ஆயிஷா (ரலி)யிடம் இருந்து கமீர் வழியாக தனது மனைவி மூலம் அறிவிக்கும் ஷுஃபீ வழியாக தாவூத், ஆஸிம் ஆகியோரும் இவ்வாறே அறிவிக்கின்றனர். எனினும் தாவூத், ஒவ்வொரு நாளும் (குளிக்க வேண்டும்) என்றும், ஆஸிம் தமது ஹதீஸில் ழுஹரின் போதும் என்றும் அறிவிக்கின்றனர். இதுவே சாலிம் பின் அப்துல்லாஹ், ஹசன், அதா ஆகியோரின் கருத்தாகும். 

ழுஹருக்கு லுஹர் என்று வருகின்ற இடத்தில் சயீத் பின் முஸய்யிப் (ரலி) அவர்கள் துஹ்ருக்கு துஹ்ர் என்றே தனது ஹதீஸில் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதில் சந்தேகம் ஏற்பட்டு அறிவிப்பாளர்கள் அதை மாற்றி ழுஹருக்கு லுஹர் என்று கூறி விட்டனர் எனக் கருதுகிறேன் என்று மாலிக் தெரிவிக்கின்றார். 

இதை மின்வர் பின் அப்துல் மாலிக் பின் சயீத் பின் அப்துர் ரஹ்மான் பின் யர்பூஃ அறிவிக்கின்ற போது அதில் அவர் துஹருக்கு துஹர் என்றே அறிவிக்கின்றார். ஆனால், அறிவிப்பாளர் அதை ழுஹருக்கு லுஹர் என்றே மாற்றி விட்டனர். 

லுஹர் : அரபியில் மேற்புள்ளியிட்ட ழ என்ற எழுத்தைக் கொண்டு துவங்கும் இவ்வார்த்தைக்கு நண்பகல் நேரம் என்று பொருளாகும். 

துஹ்ர் : மேற்புள்ளியிட்ட த என்ற எழுத்தைக் கொண்டு துவங்கும் இவ்வார்த்தைக்கு துப்புரவு என்று பொருளாகும்.

துஹ்ர் – துப்புரவு என்ற வார்த்தையின் படி வளமையான மாதவிடாய்க் காலம் முடிந்து குளிக்க வேண்டும் என்று கருத்தாகும். லுஹர் – நண்பகல் என்ற வார்த்தையின் படி தினந்தோறும் நண்பகல் நேரத்தில் குளிக்க வேண்டும் என்ற கருத்தாகும்.

(அபூதாவூத்: 301)

بَابُ مَنْ قَالَ الْمُسْتَحَاضَةُ تَغْتَسِلُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ

أَنَّ الْقَعْقَاعَ، وَزَيْدَ بْنَ أَسْلَمَ أَرْسَلَاهُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ يَسْأَلُهُ كَيْفَ تَغْتَسِلُ الْمُسْتَحَاضَةُ فَقَالَ: «تَغْتَسِلُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ، وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، فَإِنْ غَلَبَهَا الدَّمُ اسْتَثْفَرَتْ بِثَوْبٍ»

قَالَ أَبُو دَاوُدَ: وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، وَأَنَسِ بْنِ مَالِكٍ «تَغْتَسِلُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ» وَكَذَلِكَ رَوَى دَاوُدُ، وَعَاصِمٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ امْرَأَتِهِ، عَنْ قَمِيرَ، عَنْ عَائِشَةَ، ” إِلَّا أَنَّ دَاوُدَ قَالَ: «كُلَّ يَوْمٍ»، وَفِي حَدِيثِ عَاصِمٍ «عِنْدَ الظُّهْرِ»، وَهُوَ قَوْلُ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، وَالْحَسَنِ، وَعَطَاءٍ ” قَالَ أَبُو دَاوُدَ: ” قَالَ مَالِكٌ: إِنِّي لَأَظُنُّ حَدِيثَ ابْنِ الْمُسَيَّب «مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ»، إِنَّمَا هُوَ «مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ»، وَلَكِنَّ الْوَهْمَ دَخَلَ فِيهِ فَقَلَبَهَا النَّاسُ فَقَالُوا: مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ ” وَرَوَاهُ مِسْوَرُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ، قَالَ فِيهِ: «مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ» فَقَلَبَهَا النَّاسُ: مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ


AbuDawood-Tamil-301.
AbuDawood-Shamila-301.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.