தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-313

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 122

மாதவிடாய் குளிப்பு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அவர்களுடைய ஒட்டகையின் சேணத்தின் பின் பக்கம் அமர்த்தி பயணம் செய்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் வைகறை வரை தொடர்ந்து பயணம் செய்து, தனது ஒட்டகையை படுக்க வைத்தார்கள். நான் அவர்கள் ஒட்டகையின் சேணத்திலிருந்து இறங்கினேன். இந்த இடத்தில் எனது இரத்தம் படிந்திருந்தது! அது எனது முதல் மாதவிடாயாகும். உடனே, ஒட்டகத்திற்கு பாய்ந்து சென்று விட்டேன். மேலும், நான் வெட்கமடைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும், இரத்ததையும் கண்ட போது உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று வினவினார்கள். நான் ஆம் என்றேன். அப்போது அவர்கள் நீ உன்னை (உனது ரத்தம் சேணத்தில் வழிவதை விட்டும்) சரி செய்து கொள்க! மேலும், நீ ஒரு தண்ணீர் பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு போட்டு சேணத்தில் பட்ட இரத்தத்தை கழுவி விடு. பிறகு உனது வாகன இருக்கைக்கு வருக என்று சென்னார்கள். இந்நிகழ்ச்சியை தெரிவித்த பின்னர் அறிவிப்பாளர் மேலும் அறிவிக் கின்றார், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கைபரை வெற்றி கண்ட போது எங்க ளுக்கு யுத்தத்தில் கிடைத்த பொருளில் இருந்து கொஞ்சத்தை வழங்கினார்கள். மேலும், அவர் மாதவிடாயிலிருந்து துப்புர வாகும் போது தண்ணீரில் உப்பைக் கலக் காது(குளித்து) துப்புரவாக மாட்டார் என்றும், தான் மரணமானதும் தன்னை குளிப்பாட்டும் போது உப்பை பயன் படுத்துமாறு அறிவுரை வழங்கியதாகவும் அந்த அறிவிப்பாளர் தெரிவிக்கின்றார்.

அறிவிப்பாளர் : கிபார் அவர்களுடைய கிளையைச் சேர்ந்த ஒரு பெண்மணி

எனக்கு அப்பெண்மணியுடைய பெயரை முஹம்மது பின் இஸ்ஹாக் குறிப்பிட்டார். ஆனால் நான் அதை மறந்து விட்டேன் என்று அறிவிப்பாளரில் ஒருவரான சல்மா தெரிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 313)

122- بَابُ الِاغْتِسَالِ مِنَ الْحَيْضِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الرَّازِيُّ، حَدَّثَنَا سَلَمَةُ يَعْنِي ابْنَ الْفَضْلِ، أَخْبَرَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ إِسْحَاقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ سُحَيْمٍ، عَنْ أُمَيَّةَ بِنْتِ أَبِي الصَّلْتِ، عَنِ امْرَأَةٍ مِنْ بَنِي غِفَارٍ قَدْ سَمَّاهَا لِي قَالَتْ

أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَقِيبَةِ رَحْلِهِ قَالَتْ: فَوَاللَّهِ، لَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصُّبْحِ، فَأَنَاخَ وَنَزَلْتُ عَنْ حَقِيبَةِ رَحْلِهِ، فَإِذَا بِهَا دَمٌ مِنِّي فَكَانَتْ أَوَّلُ حَيْضَةٍ حِضْتُهَا قَالَتْ: فَتَقَبَّضْتُ إِلَى النَّاقَةِ وَاسْتَحْيَيْتُ، فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بِي وَرَأَى الدَّمَ قَالَ: «مَا لَكِ لَعَلَّكِ نَفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: «فَأَصْلِحِي مِنْ نَفْسِكِ، ثُمَّ خُذِي إِنَاءً مِنْ مَاءٍ، فَاطْرَحِي فِيهِ مِلْحًا، ثُمَّ اغْسِلِي مَا أَصَابَ الْحَقِيبَةَ مِنَ الدَّمِ، ثُمَّ عُودِي لِمَرْكَبِكِ». قَالَتْ: فَلَمَّا فَتَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ رَضَخَ لَنَا مِنَ الفَيْءِ قَالَتْ: وَكَانَتْ لَا تَطَّهَّرُ مِنْ حَيْضَةٍ إِلَّا جَعَلَتْ فِي طَهُورِهَا مِلْحًا، وَأَوْصَتْ بِهِ أَنْ يُجْعَلَ فِي غُسْلِهَا حِينَ مَاتَتْ


AbuDawood-Tamil-313.
AbuDawood-Shamila-313.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.