தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-338

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 128

தயம்மும் செய்து தொழுத பின்னர் ஒருவர் தண்ணீரைக் கண்டால் ?

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

இருவர் பயணம் சென்று கொண்டிருந்தனர். அப்போது (அவர்களுக்கு) தொழுகை நேரமானதும் அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அவ்விருவரும் பரிசுத்தமான மண்ணில் தயம்மம் செய்து, தொழுதார்கள். பிறகு அவ்விருவரும் அந்த (தொழுகைக்குரிய) நேரத்திலேயே தண்ணீரை பெற்று கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகையையும் உலூவையும் மீட்டிக் கொண்டார். இன்னொருவர் (அவ்வாறு) மீட்டவில்லை. பிறகு அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இதை தெரிவித்தார்கள். அப்போது அவர்கள் (இவ்வாறு) மீட்டாதவரை நோக்கி நீர் சுன்னத்திற்கு (நபி வழிக்கு) உடன் பட்டு விட்டீர்! உமது தொழுகை உமக்கு போதுமானதாகும் (திருப்பித் தொழ வேண்டியதில்லை) உலூச் செய்து, மீட்டித் தொழதவரை நோக்கி உமக்கு இருமடங்கு கூலிகள் உள்ளன! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ(ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : 

இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடம் அதா பின் யஸார், பித்ர் பின் ஸவாதா, உமைராபின் அபீநாஜியா வழியாக அப்துல்லாஹ் பின் நாபிஃ அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் அறிவிக்கின்றார்கள் : இந்த ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ அவர்களுடைய பெயரை குறிப்பிட்டிருப்பது சரியன்று. இது முர்ஸலான ஹதீஸ் ஆகும்.

இதை இமாம் நஸயீ அவர்கள் முர்ஸலாகவும், முஸ்னதாகவும் பதிவு செய்திருக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 338)

128- بَابٌ فِي الْمُتَيَمِّمِ يَجِدُ الْمَاءَ بَعْدَ مَا يُصَلِّ فِي الْوَقْتِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمَسَيَّبِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ

خَرَجَ رَجُلَانِ فِي سَفَرٍ، فَحَضَرَتِ الصَّلَاةُ وَلَيْسَ مَعَهُمَا مَاءٌ، فَتَيَمَّمَا صَعِيدًا طَيِّبًا فَصَلَّيَا، ثُمَّ وَجَدَا الْمَاءَ فِي الْوَقْتِ، فَأَعَادَ أَحَدُهُمَا الصَّلَاةَ وَالْوُضُوءَ وَلَمْ يُعِدِ الْآخَرُ، ثُمَّ أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَا ذَلِكَ لَهُ فَقَالَ لِلَّذِي لَمْ يُعِدْ: «أَصَبْتَ السُّنَّةَ، وَأَجْزَأَتْكَ صَلَاتُكَ». وَقَالَ لِلَّذِي تَوَضَّأَ وَأَعَادَ: «لَكَ الْأَجْرُ مَرَّتَيْنِ»

قَالَ أَبُو دَاوُدَ: وَغَيْرُ ابْنِ نَافِعٍ، يَرْوِيهِ عَنِ اللَّيْثِ، عَنْ عُمَيْرَةَ بْنِ أَبِي نَاجِيَةَ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ أَبُو دَاوُدَ: «وَذِكْرُ أَبِى سَعِيدٍ الْخُدْرِيِّ فِي هَذَا الْحَدِيثِ لَيْسَ بِمَحْفُوظٍ وَهُوَ مُرْسَلٌ»


AbuDawood-Tamil-338.
AbuDawood-Shamila-338.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.