பாடம் : 129
ஜுமுஆ தினத்தில் குளித்தல்.
ஜும்ஆ நாளன்று உமர் (ரலி) அவர்கள் (ஜும்ஆ) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் (பள்ளியில்) நுழைந்தார். (அவரிடம்) நீங்கள் தொழுகையை விட்டும் (அதன் ஆரம்ப நேரத்தில் வராமல்) பின் தங்கி விடுகின்றீர்கள்? என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டதும், நான் (ஜும்ஆ) பாங்கை செவிமடுத்த மாத்திரத்தில் உடனே உலூச் செய்ததை தவிர நான் வேறு எந்த வகையிலும் தாமதமாகவில்லையே என்று வந்தவர் பதில் சொன்னார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உலூ மட்டும் தான் செய்தீர்களா? உங்களில் ஒருவர் ஜும்ஆவிற்கு வர நாடினால் அவர் குளித்துக் கொள்ளட்டும் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூற செவியுறவில்லையா? என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
(அபூதாவூத்: 340)129- بَابٌ فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ، عَنْ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ بَيْنَا هُوَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ فَقَالَ عُمَرُ: أَتَحْتَبِسُونَ عَنِ الصَّلَاةِ؟ فَقَالَ الرَّجُلُ: مَا هُوَ إِلَّا أَنْ سَمِعْتُ النِّدَاءَ فَتَوَضَّأْتُ. فَقَالَ عُمَرُ: وَالْوُضُوءُ أَيْضًا، أَوَ لَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا أَتَى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ»
AbuDawood-Tamil-340.
AbuDawood-Shamila-340.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்