தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1639

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் வந்தார். இப்னு உமர்(ரலி) ஹஜ்ஜுக்குச் செல்ல வாகனம் வீட்டில் தயாராக இருந்த நிலையில், அப்துல்லாஹ் ‘நிச்சயமாக, இவ்வருடம் மக்களுக்கிடையே போர் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன்; எனவே, உங்களை மக்கள் கஅபாவுக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள். அதனால் நீங்கள் (ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கேயே தங்கிவிட்டால் நல்லது’ எனக் கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டபோது கஅபாவுக்குச் செல்ல விடாமல் குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் அவர்களைத் தடுத்தனர்.

எனவே, நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டாலும் நபி(ஸல்) அவர்கள் (அன்று) செய்ததைப் போன்றே நானும் செய்வேன். உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது. நான் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிகிறேன் என்பதற்கு உன்னையே சாட்சியாக்குகிறேன்’ என்று கூறினார்கள். பிறகு இப்னு உமர்(ரலி) மக்காவுக்குச் சென்று (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தவாஃப் செய்தார்கள்.
Book :25

(புகாரி: 1639)

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ

أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا دَخَلَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ وَظَهْرُهُ فِي الدَّارِ، فَقَالَ: إِنِّي لاَ آمَنُ أَنْ يَكُونَ العَامَ بَيْنَ النَّاسِ قِتَالٌ فَيَصُدُّوكَ عَنِ البَيْتِ فَلَوْ أَقَمْتَ، فَقَالَ: «قَدْ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ بَيْنهُ وَبَيْنَ البَيْتِ ، فَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ أَفْعَلُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ)» ثُمَّ قَالَ: «أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ مَعَ عُمْرَتِي حَجًّا»، قَالَ: ثُمَّ قَدِمَ، فَطَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.