தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-418

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூஅய்யுப் போர் செய்ய போகும் போது எங்களிடம் வருகையளித்தார். அன்றைய தினத்தில் உக்பா பின் ஆமிர் எகிப்தின் ஆளுநராக இருந்தார். அவர் மக்ரிபை பிற்படுத்தினார். அவரிடம் அபூஅய்யூப் சென்று இந்த தொழுகை என்ன தொழுகை? என்று வினவினார். அதற்கு பணியில் ஈடுபட்டு விட்டோம் என்று பதில் சொன்னார். அதற்கு அபூஅய்யூப் நட்சத்திரங்கள் தெரியும் அளவுக்கு மக்ரிபை பிற்படுத்தாத வரை எனது சமுதாயத்தவர் நன்மையிலேயே அல்லது சரியான நடைமுறைலேயே இருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீ செவியுறவில்லையா? என்று கேட்டார்கள் என மிர்சத் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 418)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ

لَمَّا قَدِمَ عَلَيْنَا أَبُو أَيُّوبَ غَازِيًا وَعُقْبَةُ بْنُ عَامِر يَوْمَئِذٍ عَلَى مِصْرَ فَأَخَّرَ الْمَغْرِبَ فَقَامَ إِلَيْهِ أَبُو أَيُّوب، فَقَالَ: لَهُ مَا هَذِهِ الصَّلَاةُ يَا عُقْبَةُ، فَقَالَ: شُغِلْنَا، قَالَ: أَمَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ: «لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ» – أَوْ قَالَ: عَلَى الْفِطْرَةِ – مَا لَمْ يُؤَخِّرُوا الْمَغْرِبَ إِلَى أَنْ تَشْتَبِكَ النُّجُومُ


AbuDawood-Tamil-418.
AbuDawood-Shamila-418.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.