தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-421

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இஷா தொழுகை நேரத்தில் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் இனி வெளியே வரமாட்டார்கள் என்று ஒருவர் எண்ணுகின்ற அளவுக்கு இஷா தொழுகையை பிற்படுத்தினார்கள். அவர்கள் தொழுதுவிட்டார்கள் என்றும் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருந்தது போன்றே அவர்களிடம், இந்த தொழுகையை நீங்கள் பிற்படுத்துங்கள். ஏனெனில், இந்த தொழுகையின் காரணமாகவே நீங்கள் மற்ற சமுதாயத்தை விட சிறப்பு அளிக்கப் பட்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு முந்தைய சமுதாயம் இந்த இஷா தொழுகையை தொழவில்லை என்று சொன்னார்கள் என முஆத் பின் ஜபல் (ரலி) அறிவிக்கின்றனர்.

(அபூதாவூத்: 421)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَرِيزٌ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ السَّكُونِيِّ، أَنَّهُ سَمِعَ مُعَاذَ بْنَ جَبَلٍ، يَقُولُ

أَبْقَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْعَتَمَةِ فَأَخَّرَ حَتَّى ظَنَّ الظَّانُّ أَنَّهُ لَيْسَ بِخَارِجٍ وَالْقَائِلُ مِنَّا يَقُولُ: صَلَّى، فَإِنَّا لَكَذَلِكَ حَتَّى خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا لَهُ كَمَا قَالُوا، فَقَالَ لَهُمْ: «أَعْتِمُوا بِهَذِهِ الصَّلَاةِ، فَإِنَّكُمْ قَدْ فُضِّلْتُمْ بِهَا عَلَى سَائِرِ الْأُمَمِ، وَلَمْ تُصَلِّهَا أُمَّةٌ قَبْلَكُمْ»


AbuDawood-Tamil-421.
AbuDawood-Shamila-421.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.