அமல்களில் சிறந்தது எது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவது என்று பதில் சொன்னார்கள் என உம்முஃ பர்வா (ரலி) அறிவிக்கின்றார். இந்த ஹதீஸை முஹம்மது பின் அப்துல்லாஹ், குஸாயீ ஆகியோர் இணைந்து அறிவிக்கின்றார்.
உம்மு ஃபர்வா (ரலி)யிடமிருந்து தன் தாயார்களில் ஒருவர் வழியாக காஸிம் பின் கன்னாம் – அப்துல்லாஹ் பின் அம்ர் மூலம் அப்துல்லாஹ் பின் மஸ்லமா அறிவிக்கின்றார். நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்தவரான உம்முஃபர்வா என்றழைக்கப் படும் மாமியிடமிருந்து காஸிம் பின் கன்னாம் – அப்துல்லாஹ் பின் அம்ர் வழியாக குஸாயீ அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது என்று அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயில் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 426)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ، عَنْ بَعْضِ أُمَّهَاتِهِ، عَنْ أُمِّ فَرْوَةَ، قَالَتْ
سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلَاةُ فِي أَوَّلِ وَقْتِهَا»، قَالَ: الْخُزَاعِيُّ فِي حَدِيثِهِ: عَنْ عَمَّةٍ لَهُ يُقَالُ لَهَا أُمُّ فَرْوَةَ قَدْ بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ
AbuDawood-Tamil-426.
AbuDawood-Shamila-426.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்