அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் செவியுற்றதை எனக்கு அறிவியுங்கள் என பஸரா நாட்டைச் சார்ந்த ஒருவர் உமாராவிடம் கேட்டார். அதற்கு அவர், சூரியன் உதிப்பதற்கு முன்பும், சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுத ஒருவர் நரகத்திற்கு செல்லமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று அறிவித்தார். அதே பஸரா நாட்டவர், இதை நீங்கள் அவரிடமிருந்து செவியுற்றீரா? என்று மூன்று தடவை கேட்டார். அதற்கு அவர் ஆம்! இந்த செய்தி முழுவதையும் நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், எனது இரு காதுகளும் செவியுற்றன! எனது உள்ளம் அதை மனனம் செய்தது என்று பதில் சொன்னார். அதற்கு அம்மனிதர் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என்று சொன்னார் என்று தன் தந்தை உமாரா மூலம் அபூபக்கர் அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
(அபூதாவூத்: 427)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ
سَأَلَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَصْرَةِ فَقَالَ: أَخْبِرْنِي مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَلِجُ النَّارَ رَجُلٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ أَنْ تَغْرُبَ»، قَالَ: أَنْتَ سَمِعْتَهُ مِنْهُ؟ ثَلَاثَ مَرَّاتٍ قَالَ: نَعَمْ، كُلُّ ذَلِكَ يَقُولُ: سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي، فَقَالَ الرَّجُلُ: وَأَنَا سَمِعْتُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَلِكَ
AbuDawood-Tamil-427.
AbuDawood-Shamila-427.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்