தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-438

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

எங்களிடம் அப்துல்லாஹ் பின் ரபாஹ் அல் அன்சாரி வருகையுற்றார். அன்சாரிகள் அவரை (பகீஹ்) மார்க்க அறிஞராக கருதியிருந்தனர். அல்லாஹ்வின் தூதருடைய குதிரை வீரரான அபூகதாதா அல் அன்சாரி எனக்கு அறிவித்தார்கள் என அவர் அறிவிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைத்தளபதிகளை (போருக்கு) அனுப்பினார்கள் என்று மேற்கண்ட நிகழ்ச்சியை அறிவிக்கின்றார்.

சூரியன் உதித்த பிறகே தவிர நாங்கள் விழிக்கவில்லை. எனவே, தொழுகைக்காக வேண்டி பதறியவர்களாக எழுந்தோம். நபி (ஸல்) அவர்கள் நிதானம், நிதானம் என்று சென்னார்கள். சூரியன் உயர்ந்ததும், உங்களில் யார் பஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்களை தொழுவோர் அவ்விரு ரக்அத்துக்களை தொழுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அவ்விரு ரக்அத்துக்களை வழமையாக தொழுவோம், வழக்கமாக தொழாதவரும் தொழுதனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி கட்டளையிட்டதும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப் பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று எங்களுக்கு தொழுவித்தார்கள். அவர்கள் தொழுது முடித்தவுடன் நம்மை தொழுகையை விட்டும் தடுத்து விடுமோ அத்தகைய காரியங்களில் எதிலும் நாம் ஈடு படாமல் இருந்ததற்காக அல்லாஹ்வை நாம் புகழ்ந்து கொள்வோமாக! எனினும் நம்முடைய உயிர்கள் மகத்துவமும் கண்ணியமும் உடைய அல்லாஹ்வின் வசமே இருந்தன! அவன் எப்போது நாடுகின்றானோ அப்போதே அவன் அனுப்பி விடுகின்றான். நாளை காலைத் தொழுகையை யார் நல்ல நிலையில் (உறங்கி விடாது0 பெற்றுக் கொள்கின்றாரோ அவர் அந்த தொழுகையுடன் இது போன்று தொழுது கொள்வாராக! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அஹ் அறிவித்தார்.

(குறிப்பு : புகாரி, நஸயீ ஆகிய நூல்களில் இந்த ஹதீஸின் ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 438)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ سُمَيْرٍ، قَالَ: قَدِمَ عَلَيْنَا عَبْدُ اللَّهِ بْنُ رَبَاحٍ الْأَنْصَارِيُّ، مِنَ الْمَدِينَةِ وَكَانَتِ الْأَنْصَارُ تُفَقِّهُهُ، فَحَدَّثَنَا قَالَ: حَدَّثَنِي أَبُو قَتَادَةَ الْأَنْصَارِيُّ فَارِسُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشَ الْأُمَرَاءِ – بِهَذِهِ الْقِصَّةِ – قَالَ: فَلَمْ تُوقِظْنَا إِلَّا الشَّمْسُ طَالِعَةً فَقُمْنَا وَهِلِينَ لِصَلَاتِنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُوَيْدًا رُوَيْدًا»، حَتَّى إِذَا تَعَالَتِ الشَّمْسُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مِنْكُمْ يَرْكَعُ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيَرْكَعْهُمَا»، فَقَامَ مَنْ كَانَ يَرْكَعُهُمَا وَمَنْ لَمْ يَكُنْ يَرْكَعُهُمَا فَرَكَعَهُمَا ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُنَادَى بِالصَّلَاةِ فَنُودِيَ بِهَا فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِنَا فَلَمَّا انْصَرَفَ قَالَ: «أَلَا إِنَّا نَحْمَدُ اللَّهَ أَنَّا لَمْ نَكُنْ فِي شَيْءٍ مِنْ أُمُورِ الدُّنْيَا يَشْغَلُنَا عَنْ صَلَاتِنَا وَلَكِنَّ أَرْوَاحَنَا كَانَتْ بِيَدِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَأَرْسَلَهَا أَنَّى شَاءَ فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ صَلَاةَ الْغَدَاةِ مِنْ غَدٍ صَالِحًا فَلْيَقْضِ مَعَهَا مِثْلَهَا»


AbuDawood-Tamil-438.
AbuDawood-Shamila-438.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.