நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த அபீசீனிய நாட்டைச் சார்ந்த தூ மிக்யிர் (ரலி) இது தொடர்பாக அறிவிக்கும் போது, நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்தனர். அவர் உலூ செய்த தண்ணீர் பட்டு தரை சரியாக நனையவில்லை. பிறகு பிலாலுக்கு அவர்கள் உத்தரவிட்டதும் அவர் அதான் சொன்னார். பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழ நின்று அவசரப்படாமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பிறகு பிலாலை நோக்கி, தொழுகைக்கு இகாமத் சொல்க! என்றார்கள். பிறகு கடமையான தொழுகையை அவசரப்படாமல் தொழுதார்கள் என்று குறிப்பிடுகின்றார்.
அபீசீனியாவைச் சார்ந்தவரான தூமிக்பார் யசீத் பின் சுலைஹ் வழியாக என்று இப்றாஹீம் பின் அல்ஹசன் அறிவிப்பாளர்களின் பெயரை குறிப்பிடுகின்றார்.
(குறிப்பு : சயீத் பின் சுலைஹ் என்பதற்கு பதிலாக) யசித் பின் சாலிஹ் என உபைத் குறிப்பிடுகின்றார்.)
(அபூதாவூத்: 445)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا حَجَّاجٌ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَرِيزٌ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَبِي الْوَزِيرِ، حَدَّثَنَا مُبَشِّرٌ يَعْنِي الْحَلَبِيَّ، حَدَّثَنَا حَرِيزٌ يَعْنِي ابْنَ عُثْمَانَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ صَالِحٍ، عَنْ ذِي مِخْبَرٍ الْحَبَشِيِّ، وَكَانَ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْخَبَرِ، قَالَ
فَتَوَضَّأَ – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – وُضُوءًا لَمْ يَلْثَ مِنْهُ التُّرَابُ، ثُمَّ أَمَرَ بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَكَعَ رَكْعَتَيْنِ غَيْرَ عَجِلٍ، ثُمَّ قَالَ لِبِلَالٍ: «أَقِمِ الصَّلَاةَ»، ثُمَّ صَلَّى الْفَرْضَ وَهُوَ غَيْرُ عَجِلٍ
قَالَ عَنْ حَجَّاجٍ، عَنْ يَزِيدَ بْنِ صُلَيْحٍ، حَدَّثَنِي ذُو مِخْبَرٍ رَجُلٌ مِنَ الْحَبَشَةِ وقَالَ عُبَيْدٌ: يَزِيدُ بْنُ صَالِحٍ
AbuDawood-Tamil-445.
AbuDawood-Shamila-445.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்