ஹுதைபிய்யா உடன் படிக்கை கட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்து கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஓய்வெடுக்க எண்ணி) நமக்காக இன்று இரவு காவல் காப்பவர் யார்? என்று கேட்டார்கள். பிலால் நான் என்று பதில் சொன்னார். எல்லோரும் சூரியன் உதயமாகும் வரை தூங்கிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் கண் விழித்ததும், நீங்கள் வழக்கமாக செய்வது போல் செய்து (தொழுது) கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறு நாங்கள் செய்தோம். இவ்வாறே தூங்கியவர்களுக்கும் மறந்தவர்களுக்கும் இதையே நடைமுறையாக்கிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீயிலும் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 447)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَلْقَمَةَ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ
أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَكْلَؤُنَا» فَقَالَ بِلَالٌ: أَنَا، فَنَامُوا حَتَّى طَلَعَتِ الشَّمْسُ فَاسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «افْعَلُوا كَمَا كُنْتُمْ تَفْعَلُونَ»، قَالَ: فَفَعَلْنَا، قَالَ: «فَكَذَلِكَ فَافْعَلُوا لِمَنْ نَامَ أَوْ نَسِيَ»
AbuDawood-Tamil-447.
AbuDawood-Shamila-447.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்