தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1657

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘நான் நபி(ஸல்) அவர்களுடனும், அபூ பக்ர்(ரலி) அவர்களுடனும், உமர்(ரலி) அவர்களுடனும் (மினாவில்) (கடமையான நான்கு ரக்அத்களை சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதுள்ளேன்.

பின்னர் நீங்கள் அதில் குழம்பிப் போய் பல்வேறு கருத்துக்கள் கொண்டீர்கள். (நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஏற்றுக் கொள்ளப்படும் இரண்டு ரக்அத்கள் எனக்குப் போதுமே!’
Book :25

(புகாரி: 1657)

حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ

«صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، وَمَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ رَكْعَتَيْنِ، وَمَعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ رَكْعَتَيْنِ، ثُمَّ تَفَرَّقَتْ بِكُمُ الطُّرُقُ، فَيَا لَيْتَ حَظِّي مِنْ أَرْبَعٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.