தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1662

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு ஷிஹாப் அறிவித்தார்.

இப்னுஸ் ஸுபைர்(ரலி) உடன் தாம் போர் தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த ஹஜ்ஜாஜ், இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘அரஃபாவில் தங்கும்போது நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள்?’ எனக் கேட்டதற்கு ஸாலிம், ‘நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் அரஃபா நாளில் நடுப்பகலில் தொழுது விடுவீராக! என்றார். அப்போது இப்னு உமர்(ரலி), ‘ஸாலிம் கூறியது உண்மைதான்.

(நபித்தோழர்கள் அரஃபாவில்) லுஹரையும் அஸரையும் நபி வழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்’ என்றார்.

நான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்களா? என ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், ‘இந்த விஷயத்தில் நபிவழியைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்றுவீர்கள் எனக் கேட்டார்.
Book :25

(புகாரி: 1662)

بَابُ الجَمْعِ بَيْنَ الصَّلاَتَيْنِ بِعَرَفَةَ

وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِذَا فَاتَتْهُ الصَّلاَةُ مَعَ الإِمَامِ جَمَعَ بَيْنَهُمَا

وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ

أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ الحَجَّاجَ بْنَ يُوسُفَ، عَامَ نَزَلَ بِابْنِ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، سَأَلَ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَيْفَ تَصْنَعُ فِي المَوْقِفِ يَوْمَ عَرَفَةَ؟ فَقَالَ سَالِمٌ: «إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَهَجِّرْ بِالصَّلاَةِ يَوْمَ عَرَفَةَ»، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «صَدَقَ، إِنَّهُمْ كَانُوا يَجْمَعُونَ بَيْنَ الظُّهْرِ وَالعَصْرِ فِي السُّنَّةِ»، فَقُلْتُ لِسَالِمٍ: أَفَعَلَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ سَالِمٌ: «وَهَلْ تَتَّبِعُونَ فِي ذَلِكَ إِلَّا سُنَّتَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.