தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-500

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூமஷ்தூரா (ரலி) அறிவிப்பதாவது :

அல்லாஹ்வின் தூதரே! அதானின் முறையை எனக்கு கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் எனது முன்னந்தலையை தடவிவிட்டு அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் என்ற இந்த வார்த்தைகளை உன் குரலை உயர்த்தி சொல்க! பிறகு அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் – அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று (உனக்குள்) உன் குரலை தாழ்த்தி சொல்க! பிறகு அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹு – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலல்பலாஹ் – ஹய்ய அலல்பலாஹ் என்று உனது குரலை உயர்த்தி சொல்க! சுப்ஹு தொழுகையாக இருந்தால் அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் (தூக்கத்தை விட தொழுகை சிறந்தது) அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்க! என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அபூ மஷ்தூரா ——–> அப்துல் மலிக் ——–> முஹம்மது ——–> ஹாரிஸ் பின் உபைத் வழியாக முஸத்தத் அறிவிக்கும் செய்தி.

(அபூதாவூத்: 500)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي سُنَّةَ الْأَذَانِ؟، قَالَ: فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِي، وَقَالَ: ” تَقُولُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، تَرْفَعُ بِهَا صَوْتَكَ، ثُمَّ تَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، تَخْفِضُ بِهَا صَوْتَكَ، ثُمَّ تَرْفَعُ صَوْتَكَ بِالشَّهَادَةِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، فَإِنْ كَانَ صَلَاةُ الصُّبْحِ قُلْتَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ


AbuDawood-Tamil-500.
AbuDawood-Shamila-500.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.