தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-505

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனக்குத் கற்றுத் தந்ததாக அபூமஷ்தூரா (ரலி) அறிவித்ததாக இதன் அறிவிப்பாளர் நாபிஃஉ பின் உமர் அறிவித்து அப்துல் அஜீஸ் பின் அப்துல் மலிக் என்பாரிடமிருந்து (503) அறிவிக்கும் இப்னு ஜுரைஜின் அதான் ஹதீஸைப் போன்றே அறிவிக்கின்றார். அந்த ஹதீஸின் கருத்தை தான் இவர் இங்கு அறிவிக்கின்றார். (ஒரே ஒரு வித்தியாசம் இந்த ஹதீஸில் அல்லாஹு அக்பர் இரண்டு தடவை இடம் பெறுகின்றது. இப்னு ஜுரைஜின் ஹதீஸில் நான்கு தடவை இடம் பெறுகின்றது.)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

நான் அபூமஷ்தூரா (ரலி) யின் மகனிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்கள் தந்தை செவிமடுத்த அதானின் ஹதீஸை எனக்கு அறிவியுங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று மட்டும் சொன்னதாக மாலிக் பின் தீனார் அறிவிக்கும் ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

தன்னுடைய பாட்டனார் ——–> தனது சிறிய தந்தை வழியாக அபூமஷ்தூராவின் மகனிடமிருந்து ஜஃபர் பின் சுலைமான் அறிவிக்கும் ஹதீஸிலும் இவ்வாறே அமைந்துள்ளது. எனினும் திரும்பவும் நீ உனது குரலை உயர்த்தி அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் என்று சொல்க என்று (நபி (ஸல்) சொன்னதாக) இடம் பெற்றுள்ளது.

(அபூதாவூத்: 505)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ الْإِسْكَنْدَرَانِيُّ، حَدَّثَنَا زِيَادٌ يَعْنِي ابْنَ يُونُسَ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ يَعْنِي الْجُمَحِيَّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ الْجُمَحِيِّ، عَنْ أَبِي مَحْذُورَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ الْأَذَانَ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ»، ثُمَّ ذَكَرَ مِثْلَ أَذَانِ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الْمَلِكِ، وَمَعْنَاهُ

قَالَ أَبُو دَاوُدَ: وَفِي حَدِيثِ مَالِكِ بْنِ دِينَارٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ أَبِي مَحْذُورَةَ، قُلْتُ: حَدِّثْنِي عَنْ أَذَانِ أَبِيكَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ»، قَطْ، وَكَذَلِكَ حَدِيثُ جَعْفَرِ بْنِ سُلَيْمَانَ، عَنِ ابْنِ أَبِي مَحْذُورَةَ، عَنْ عَمِّهِ، عَنْ جَدِّهِ، إِلَّا أَنَّهُ قَالَ: ” ثُمَّ تَرْجِعُ فَتَرْفَعُ صَوْتَكَ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ


AbuDawood-Tamil-505.
AbuDawood-Shamila-505.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.