தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-514

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

சுப்ஹு தொழுகையின் முதல் அதானின் போது நபி (ஸல்) அவர்கள் எனக்கு அதான் சொல்லும்படி உத்தரவிட்டார்கள். நான் அதான் சொன்னதும் அல்லாஹ்வின் தூதரே! இகாமத் சொல்லட்டுமா? என்று கேட்டேன். அவர்கள் கிழக்கு பக்கமாக பஜ்ர் நேரம் உதயமாகிவிட்டதா? என்று பார்த்து விட்டு வேண்டாம் என்றார்கள். சுப்ஹு நேரம் உதயமானதும் (வாகனத்திலிருந்து) இறங்கி உலூச் செய்து விட்டு என்னிடம் திரும்ப வந்தார்கள். (பிரிந்து பிரிந்து நின்ற) நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது பிலால் (ரலி) இகாமத் சொல்ல விரும்பிய போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சகோதரர் சுதாயி தான் பாங்கு சொன்னார். யார் பாங்கு சொல்கின்றாரோ அவரே இகாமத்தும் சொல்வாராக என்று சொன்னதும் நான் இகாமத் சொன்னேன் என்று சியாத் பின் அல்ஹர்ஸ் சுதாயி அறிவிக்கின்றார்.

இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 514)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ غَانِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ يَعْنِي الْأَفْرِيقِيَّ، أَنَّهُ سَمِعَ زِيَادَ بْنَ نُعَيْمٍ الْحَضْرَمِيَّ، أَنَّهُ سَمِعَ زِيَادَ بْنَ الْحَارِثِ الصُّدَائِيَّ، قَالَ

لَمَّا كَانَ أَوَّلُ أَذَانِ الصُّبْحِ أَمَرَنِي يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذَّنْتُ، فَجَعَلْتُ أَقُولُ: أُقِيمُ يَا رَسُولَ اللَّهِ؟ فَجَعَلَ يَنْظُرُ إِلَى نَاحِيَةِ الْمَشْرِقِ إِلَى الْفَجْرِ، فَيَقُولُ: «لَا» حَتَّى إِذَا طَلَعَ الْفَجْرُ نَزَلَ فَبَرَزَ، ثُمَّ انْصَرَفَ إِلَيَّ وَقَدْ تَلَاحَقَ أَصْحَابُهُ – يَعْنِي فَتَوَضَّأَ – فَأَرَادَ بِلَالٌ أَنْ يُقِيمَ، فَقَالَ لَهُ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخَا صُدَاءٍ هُوَ أَذَّنَ وَمَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ»، قَالَ: فَأَقَمْتُ


AbuDawood-Tamil-514.
AbuDawood-Shamila-514.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.