தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-550

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஐந்து நேரத் தொழுகைகளுக்காக அழைப்பு விடுக்கப் படும் போது அந்த தொழுகைகளை பேணிக் கொள்ளுங்கள்! ஏனெனில் நிச்சயமாக அவை நேர்வழிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் தன்னுடைய நேர்வழிகளையே மார்க்கமாக்கியிருக்கின்றான். தெளிவான நயவஞ்சகக் காரனை தவிர வேறு யாரும் அத்தொழுகைகளை விட்டும் விலகிவிடுவதில்லை என்றே நாங்கள் விளங்கி வைத்திருக்கின்றோம். நிச்சயமாக ஒருவர் இருவர்களுக்கிடையே கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டு வரிசையில் கொண்டு வந்து நிறுத்தப் படுவதை நாங்கள் கண்டிருக்கின்றோம். உங்களில் ஒவ்வொருவருக்கும் அவரது வீட்டில் தொழக் கூடிய இடம் இல்லாமல் இருப்பதில்லை. (இதனால்) உங்களுடைய வீடுகளில் தொழுது கொண்டு உங்களுடைய பள்ளிவாசல்களை விட்டு விடுவீர்களானால் நிச்சயமாக உங்களுடைய நபி வழியை விட்டவராவீர்கள்! உங்களுடைய நபி வழியை விட்டு விடுவீர்களெனில் நிச்சயமாக இறை நிராகரிப்பு செய்தவர்களாவீர் என்று அப்துல்லாஹ் பின் மவூத் (ரலி) கூறுகின்றார்கள்.

இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 550)

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبَّادٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ

«حَافِظُوا عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْخَمْسِ، حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى، وَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الْهُدَى، وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلَّا مُنَافِقٌ بَيِّنُ النِّفَاقِ، وَلَقَدْ رَأَيْتُنَا وَإِنَّ الرَّجُلَ لَيُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ، وَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَلَهُ مَسْجِدٌ فِي بَيْتِهِ، وَلَوْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ وَتَرَكْتُمْ مَسَاجِدَكُمْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكَفَرْتُمْ»


AbuDawood-Tamil-550.
AbuDawood-Shamila-550.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.