தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-568

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பெண்களுக்கு இரவில் பள்ளிகளுக்கு வர அனுமதி அளியுங்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கும்போது அவரது மகன், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களுக்கு நாம் அனுமதியளிக்கக் கூடாது. காரணம் இந்த சலுகையை அவர்கள் தவறாக பயன்படுத்திவிடுவார்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்களுக்கு நாம் அனுமதியளிக்கக் கூடாது என சொன்னார். இப்னு உமர் (ரலி) அவரை ஏசி, கடிந்துக் கொண்டார். பெண்களுக்கு (தொழவர) அனுமதியளியுங்கள் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக சொல்கின்றேன். நீ அவர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சொல்கின்றாய் என்று சொன்னார்கள். 

இவ்வாறு முஜாஹித் அறிக்கின்றார்.

(அபூதாவூத்: 568)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«ائْذَنُوا لِلنِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ»، فَقَالَ ابْنٌ لَهُ: وَاللَّهِ لَا نَأْذَنُ لَهُنَّ فَيَتَّخِذْنَهُ دَغَلًا، وَاللَّهِ لَا نَأْذَنُ لَهُنَّ، قَالَ: فَسَبَّهُ وَغَضِبَ، وَقَالَ: أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْذَنُوا لَهُنَّ» وَتَقُولُ لَا نَأْذَنُ لَهُنَّ؟


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-568.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-865 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.