தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-585

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மக்கள் எங்களை கடந்து செல்லும் பகுதியில் குடியமர்ந்திருந்தோம். அவர்கள் திரும்பும்போது எங்களைத் தாண்டி செல்வர். அப்போது அவர்கள் எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்னதைச் சொன்னார்கள் என எங்களிடம் அறிவிப்பார்கள். நான் அது சமயம் (குர்ஆனை) மனனம் செய்யும் சிறுவனாக இருந்ததால் குர்ஆனை அதிகமாக மனனம் செய்திருந்தேன். என்னுடைய தந்தை தனது சமூகத்தார் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு தொழக் கற்றுக்கொடுத்து உங்களில் குர்ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர் தொழுவிக்கட்டும்! என்றும் சொன்னார்கள். நான் குர்ஆனை நன்கு மனனம் செய்திருந்ததால் குர்ஆனை நன்கு ஓதுபவனாக இருந்தேன். எனவே மக்கள் என்னை முற்படுத்தியதும் நான் அவர்களுக்கு தொழுவித்தேன். ஒரு மஞ்சள் நி சிறிய சால்வை மட்டும் நான் அணிந்திருந்ததால் நான் சஜ்தா செய்யும்போது என்னை விட்டும் அது விலகி விடும். அப்போது உங்களுடைய இமாமின் மானத்தை மறைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று ஒரு பெண்மணி சொன்னதும் அம்மான் நாட்டு சட்டையை எனக்காக வாங்கினர். இஸ்லாத்தை தழுவிய பின்பு இந்த ஆடையினால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் நான் மகிழிச்சி அடைந்ததில்லை.

(அபூதாவூத்: 585)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ، قَالَ

كُنَّا بِحَاضِرٍ يَمُرُّ بِنَا النَّاسُ إِذَا أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانُوا إِذَا رَجَعُوا مَرُّوا بِنَا، فَأَخْبَرُونَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كَذَا وَكَذَا وَكُنْتُ غُلَامًا حَافِظًا فَحَفِظْتُ مِنْ ذَلِكَ قُرْآنًا كَثِيرًا فَانْطَلَقَ أَبِي وَافِدًا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ فَعَلَّمَهُمُ الصَّلَاةَ، فَقَالَ: «يَؤُمُّكُمْ أَقْرَؤُكُمْ» وَكُنْتُ أَقْرَأَهُمْ لِمَا كُنْتُ أَحْفَظُ فَقَدَّمُونِي فَكُنْتُ أَؤُمُّهُمْ وَعَلَيَّ بُرْدَةٌ لِي صَغِيرَةٌ صَفْرَاءُ، فَكُنْتُ إِذَا سَجَدْتُ تَكَشَّفَتْ عَنِّي، فَقَالَتْ: امْرَأَةٌ مِنَ النِّسَاءِ: وَارُوا عَنَّا عَوْرَةَ قَارِئِكُمْ، فَاشْتَرَوْا لِي قَمِيصًا عُمَانِيًّا، فَمَا فَرِحْتُ بِشَيْءٍ بَعْدَ الْإِسْلَامِ فَرَحِي بِهِ، فَكُنْتُ أَؤُمُّهُمْ وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ


AbuDawood-Tamil-585.
AbuDawood-Shamila-585.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.