தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1683

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர் ரஹ்மான் இப்னு யஸித் அறிவித்தார்.

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் மக்காவுக்குப் புறப்பட்டோம். பிறகு முஸ்தலிஃபாவுக்கு நாங்கள் வந்தபோது, அவர் தனித்தனியாக இரண்டு தொழுகைகளை தனித்தனி பாங்கு, இகாமத்துடன் தொழுதார்கள்.

இரண்டு தொழுகைகளுக்கிடையே இரவு உணவு அருந்தினார்கள். பிறகு ஃபஜ்ர் உதயமான வேளையில் ஃபஜ்ர் தொழுதார்கள். அப்போது சிலர் ‘ஃபஜ்ர் உதயமாம்விட்டது’ என்றும் சிலர் ‘ஃபஜ்ரு உதயமாகவில்லை’ என்று கூறிக் கொண்டிருந்தனர். பிறகு அவர் ‘இந்த இடத்தில் இவ்விரு தொழுகைகளுக்கான நேரங்கள் நமக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒன்று; மக்ரிப், இஷாவாகும். ஏனெனில், மக்கள் இருள் சூழ்ந்த பின்புதான் (இஷாவின் நேரத்தில் தான்) முஸ்தலிஃபாவை அடைவார்கள்.

இன்னொன்று; இந்த நேரத்தின் ஃபஜ்ருத் தொழுகை’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக் கூறினார். பிறகு அவர் விடியும்வரை தங்கியிருந்துவிட்டு, ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் இப்போது இங்கிருந்து திரும்பினால் நபி வழியைச் செயல்படுத்தியவராவார்!’ எனக் கூறினார்.

‘இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் இக்கூற்று விரைவானதா அல்லது உஸ்மான்(ரலி) புறப்பட்டது விரைவானதா?’ என்று எனக்குத் தெரியயவில்லை. (அந்த அளவுக்கு விரைவாக உஸ்மான்(ரலி) திரும்பிவிட்டார்கள்.) பிறகு இப்னு மஸ்வூத்(ரலி) துல்ஹஜ் 10-ஆம் நாள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து கல்லெறியும் வரை தல்பியா சொல்லிக் கொண்டேயிருந்தார்.
Book :25

(புகாரி: 1683)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ

خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، إِلَى مَكَّةَ، ثُمَّ قَدِمْنَا جَمْعًا، فَصَلَّى الصَّلاَتَيْنِ كُلَّ صَلاَةٍ وَحْدَهَا بِأَذَانٍ وَإِقَامَةٍ، وَالعَشَاءُ بَيْنَهُمَا، ثُمَّ صَلَّى الفَجْرَ حِينَ طَلَعَ الفَجْرُ، قَائِلٌ يَقُولُ: طَلَعَ الفَجْرُ، وَقَائِلٌ يَقُولُ: لَمْ يَطْلُعِ الفَجْرُ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ حُوِّلَتَا عَنْ وَقْتِهِمَا، فِي هَذَا المَكَانِ، المَغْرِبَ وَالعِشَاءَ، فَلاَ يَقْدَمُ النَّاسُ جَمْعًا حَتَّى يُعْتِمُوا، وَصَلاَةَ الفَجْرِ هَذِهِ السَّاعَةَ»، ثُمَّ وَقَفَ حَتَّى أَسْفَرَ، ثُمَّ قَالَ: لَوْ أَنَّ أَمِيرَ المُؤْمِنِينَ أَفَاضَ الآنَ أَصَابَ السُّنَّةَ، فَمَا أَدْرِي: أَقَوْلُهُ كَانَ أَسْرَعَ أَمْ دَفْعُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَلَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ العَقَبَةِ يَوْمَ النَّحْرِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.