அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார்.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜுத் தமத்துஉ பற்றிக் கேட்டேன். அவர் அதையே நிறைவேற்றுமாறு எனக்குக் கூறினார். பிறகு நான் அவர்களிடம், குர்பானி கொடுப்பது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஒட்டகத்தை அல்லது மாட்டை அல்லது ஆட்டை பலியிடலாம்; அல்லது ஒரு (ஒட்டகத்தின் அல்லது மாட்டின்) பலியில் ஒரு பங்காளியாகச் சேரலாம்’ என்று கூறினார்கள்.
மக்களோ, ஹஜ்ஜுத் தமத்துஉவை வெறுத்தது போலிருந்தது. நான் உறங்கியபோது கனவில் ஒருவர் ‘(உம்முடைய) ஹஜ்(ஜில் குற்றம் ஏதுமில்லை: அது) ஏற்கப்படக் கூடியதே! தமத்துஉவும் ஏற்கப்பட்டது!’ என உரத்துக் கூவினார். உடனே நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வந்து என் கனவைக் கூறினேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹ் மிகப்பெரியவன்; அபுல்காஸிம் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையே இது!’ எனக் கூறினார்கள்.
Book :25
بَابُ {فَمَنْ تَمَتَّعَ بِالعُمْرَةِ إِلَى الحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ فِي الحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي المَسْجِدِ الحَرَامِ} [البقرة: 196]
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ
سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ المُتْعَةِ، فَأَمَرَنِي بِهَا، وَسَأَلْتُهُ عَنِ الهَدْيِ، فَقَالَ: «فِيهَا جَزُورٌ أَوْ بَقَرَةٌ أَوْ شَاةٌ أَوْ شِرْكٌ فِي دَمٍ»، قَالَ: وَكَأَنَّ نَاسًا كَرِهُوهَا، فَنِمْتُ فَرَأَيْتُ فِي المَنَامِ كَأَنَّ إِنْسَانًا يُنَادِي: حَجٌّ مَبْرُورٌ، وَمُتْعَةٌ مُتَقَبَّلَةٌ، فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَحَدَّثْتُهُ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ، سُنَّةُ أَبِي القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
قَالَ: وَقَالَ آدَمُ، وَوَهْبُ بْنُ جَرِيرٍ، وَغُنْدَرٌ، عَنْ شُعْبَةَ: عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ وَحَجٌّ مَبْرُورٌ
சமீப விமர்சனங்கள்