தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1708

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நாஃபிவு அறிவித்தார்.

இப்னுஸ் ஸுபைர்(ரலி) உடன் ஹஜ்ஜாஜ் போரிட்ட ஆண்டு, இப்னு உமர்(ரலி) ஹஜ் செய்ய நாடினார். அப்போது அவரிடம், ‘மக்களிடையே போர் மூண்டுள்ளது; எனவே உங்களை ஹஜ் செய்யவிடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்’ எனக் கூறப்பட்டது.

உடனே அவர், ‘அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது! எனவே அந்த நேரத்தில் (நபி(ஸல்) அவர்கள் செய்ததையே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்’ எனக் கூறிப் புறப்பட்டு ‘பைதா’ என்னுமிடத்திற்கு வந்ததும் ‘ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றேதான்; (எனவே) நான் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிந்துள்ளேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்!’ எனக் கூறினார்.

மேலும் அடையாள மாலையிடப்பட்ட பலிப்பிராணியை வாங்கினார். மக்கா வந்து கஅபாவைத் வலம்வந்துவிட்டு, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி சஃயு செய்தார். இதை விட வேறெதுவும் அதிகமாகச் செய்யவில்லை.

துல்ஹஜ் 10ஆம் நாளில்தான் குர்பானிப் பிராணியை பலியிட்டுவிட்டுத் தலைமுடியை மழித்தார். அதுவரை, இஹ்ராம் அணிந்த நிலையில் விலக்கப்பட்ட எதையும் செய்யவில்லை.

‘முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே ஹஜ் – உம்ரா இரண்டிற்கும் போதும்’ என்றும் கருதினார். மேலும், ‘இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள்’ என்றும் கூறினார்.
Book :25

(புகாரி: 1708)

بَابُ مَنِ اشْتَرَى هَدْيَهُ مِنَ الطَّرِيقِ وَقَلَّدَهَا

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ قَالَ

أَرَادَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا الحَجَّ عَامَ حَجَّةِ الحَرُورِيَّةِ فِي عَهْدِ ابْنِ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقِيلَ لَهُ: إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ وَنَخَافُ أَنْ يَصُدُّوكَ، فَقَالَ: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21] «إِذًا أَصْنَعَ كَمَا صَنَعَ، أُشْهِدُكُمْ أَنِّي أَوْجَبْتُ عُمْرَةً» حَتَّى إِذَا كَانَ بِظَاهِرِ البَيْدَاءِ، قَالَ: «مَا شَأْنُ الحَجِّ وَالعُمْرَةِ إِلَّا وَاحِدٌ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ جَمَعْتُ حَجَّةً مَعَ عُمْرَةٍ»، وَأَهْدَى هَدْيًا مُقَلَّدًا اشْتَرَاهُ حَتَّى قَدِمَ، فَطَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا، وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى يَوْمِ النَّحْرِ، فَحَلَقَ وَنَحَرَ، وَرَأَى أَنْ قَدْ  قَضَى طَوَافَهُ الحَجَّ وَالعُمْرَةَ بِطَوَافِهِ، الأَوَّلِ ثُمَّ قَالَ: «كَذَلِكَ صَنَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.