தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1750

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 138 ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறவேண்டும்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அறிவித்துள்ளார்கள். 

 அஃமஷ்(ரஹ்) அறிவித்தார்.

ஹஜ்ஜாஜ் மிம்பர் மீது ஏறி, ‘பசுமாடு பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம். இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம், பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்’ என்று கூறியதை நான் செவியேற்றிருக்கிறேன்.

இதுபற்றி நான் இப்ராஹீமிடம் கூறியபோது அவர், இதுபற்றி அப்துர் ரஹ்மான் இப்னு யஸித் பின்வருமாறு கூறினார்கள் என குறிப்பிட்டார்.

‘நான் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருக்கும்போது, இப்னு மஸ்வூத்(ரலி) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்போது பத்னுல்வாதி என்னும் இடத்தை அடைந்து, அதிலுள்ள மரத்திற்கு நேராக வந்ததும் அதன் குறுக்கே நின்று கொண்டு, ஏழுகற்களை (ஒவ்வொன்றாக) எறிந்தார்கள்.

ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். ‘பிறகு அல்லாஹ்வின் மீது ஆணையாக! யாருக்கு அல்பகரா அத்தியாயம் அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் (கல்லெறிந்தபடி) நின்றார்கள்!’ என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
Book : 25

(புகாரி: 1750)

بَابُ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ

قَالَهُ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ عَبْدِ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ

سَمِعْتُ الحَجَّاجَ، يَقُولُ عَلَى المِنْبَرِ: السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا البَقَرَةُ، وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا آلُ عِمْرَانَ، وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا النِّسَاءُ، قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِإِبْرَاهِيمَ فَقَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ أَنَّهُ كَانَ مَعَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ رَمَى جَمْرَةَ العَقَبَةِ، فَاسْتَبْطَنَ الوَادِيَ حَتَّى إِذَا حَاذَى بِالشَّجَرَةِ اعْتَرَضَهَا، فَرَمَى بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ ثُمَّ قَالَ: «مِنْ هَا هُنَا وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ قَامَ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ البَقَرَةِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.