தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1778

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 கதாதா (ரஹ்) அறிவித்தார்.

‘நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?’ என நான் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதற்க அவர், ‘நான்கு (உம்ராக்கள் செய்துள்ளார்கள்); அவை: ஹுதைபிய்யா எனுமிடத்தில் துல்கஅதா மாதத்தில், இணைவைப்போர் தடுத்தபோது செய்யச் சென்றது;

இணைவைப்போருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது; அடுத்து ‘ஜிர்இர்ரானா’ என்ற இடத்திலிருந்து ஒரு போரின்… அது ஹுனைன் போர் என்று கருதுகிறேன்.. கனீமத்தைப் பங்கிட்ட பொழுது செய்தது;

(நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்கள்!)’ பிறகு ‘எத்தனை ஹஜ் செய்திருக்கிறார்கள்?’ என்று நான் கேட்டதற்கு, ‘ஒரு ஹஜ்தான்!’ என்றார்கள்.
Book :26

(புகாரி: 1778)

حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ،

سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، كَمُ اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: ” أَرْبَعٌ: عُمْرَةُ الحُدَيْبِيَةِ فِي ذِي القَعْدَةِ حَيْثُ صَدَّهُ المُشْرِكُونَ، وَعُمْرَةٌ مِنَ العَامِ المُقْبِلِ فِي ذِي القَعْدَةِ حَيْثُ صَالَحَهُمْ، وَعُمْرَةُ الجِعِرَّانَةِ إِذْ قَسَمَ غَنِيمَةَ – أُرَاهُ – حُنَيْنٍ ” قُلْتُ: كَمْ حَجَّ؟ قَالَ: «وَاحِدَةً»


Bukhari-Tamil-1778.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1778.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஹஜ் கடமையான ஒருவர் உம்ராச் செய்யும் போது அதனால் அடுத்து அவரால் ஹஜ் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறுகின்றனர்.
  • ஹதீஸ்களை ஆராய்ந்தால் இந்த வாதங்கள் தவறானைவை என்பதைத் தெளிவாக அறியலாம். நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி காலத்தில் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்தார்கள். அந்த ஹஜ்ஜுக்கு முன்னால் நான்கு முறை உம்ரா செய்துள்ளார்கள்.

இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-12372 , 13565 , 13687 , தாரிமீ-1828 , புகாரி-1778 , 1779 , 1780 , 3066 , 4148 , முஸ்லிம்-2404 , அபூதாவூத்-1994 ,  திர்மிதீ-815 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.