அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆட்டு மந்தைக்குள் அனுப்பப்பட்ட பசியுள்ள இரண்டு ஓநாய்கள் அந்த மந்தையிலுள்ள ஆடுகளை(த் தாக்கி) அழிப்பதைவிட, ஒரு மனிதனுக்குச் செல்வத்தின் மீதும் செல்வாக்கின் மீதுமுள்ள பேராசையானது, அவனது மார்க்கத்தை மிகவும் அழிக்கக்கூடியதாகும்.
அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
இப்பாடப்பொருள் சம்பந்தமான ஹதீஸ் இப்னு உமர் (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் அறிவிப்பாளர்தொடர் சரியானதல்ல.
(திர்மிதி: 2376)حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ المَرْءِ عَلَى المَالِ وَالشَّرَفِ لِدِينِهِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَيُرْوَى فِي هَذَا الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا يَصِحُّ إِسْنَادُهُ
Tirmidhi-Tamil-2298.
Tirmidhi-TamilMisc-2298.
Tirmidhi-Shamila-2376.
Tirmidhi-Alamiah-2298.
Tirmidhi-JawamiulKalim-2310.
தமிழாக்கத்தில் விடுபட்டுல்லது-
செல்வத்தினிலும் மரியாதையினிலும் மீதுள்ள பேராசை
அஸ்ஸலாமு அலைக்கும். ஜஸாகல்லாஹு கைரா. மரியாதை என்பதற்கு செல்வாக்கு என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.