கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் முகத்தில் பேன்கள் விழுந்துகொண்டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன்.
அப்போது ஹுதைபியாவிலிருந்து நபி(ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.
அப்போது இறைவன் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட வசனத்தை அருளினான். உடனே நபி(ஸல்) அவர்கள் மூன்று ஸாஉ தானியத்தை ஆறு பேருக்கு வழங்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை பலியிட வேண்டும் அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்! என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.
Book : 27
وَعَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ : حَدَّثَنَا وَرْقَاءُ ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ ، عَنْ مُجَاهِدٍ : أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَآهُ وَقَمْلُهُ يَسْقُطُ عَلَى وَجْهِهِ : مِثْلَهُ
சமீப விமர்சனங்கள்