தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1805

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உணவை நடுப்பகுதியிலிருந்து சாப்பிடுவது வெறுப்பிற்குறியது.

நாம் உண்ணும் உணவின் நடுவில்தான் பரக்கத் இறங்குகிறது. எனவே அதன் ஓரத்திலிருந்து உண்ணுங்கள். நடுவிலிருந்து உண்ணாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(திர்மிதி: 1805)

بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الأَكْلِ مِنْ وَسَطِ الطَّعَامِ

حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«البَرَكَةُ تَنْزِلُ وَسَطَ الطَّعَامِ، فَكُلُوا مِنْ حَافَتَيْهِ، وَلَا تَأْكُلُوا مِنْ وَسَطِهِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ إِنَّمَا يُعْرَفُ مِنْ حَدِيثِ عَطَاءِ بْنِ السَّائِبِ وَقَدْ رَوَاهُ شُعْبَةُ، وَالثَّوْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ وَفِي البَاب عَنْ ابْنِ عُمَرَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1727.
Tirmidhi-Shamila-1805.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1722.




إسناده حسن رجاله ثقات عدا عطاء بن السائب الثقفي وهو صدوق حسن الحديث (جوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் நம்பகமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இவரிடமிருந்து ஜரீர் அவர்கள் செவியேற்றது அதாஉ மூளை குழம்பிய பின் தான்.
  • மேலும் ஸயீத் பின் ஜுபைர் அவர்கள், நபியின் கூற்றாகச் சொல்லாமல் நபித்தோழரின் கூற்றாகச் சொன்ன பல செய்திகளை நபியின் கூற்றாக அதாஉ பின் ஸாயிப் அறிவித்துள்ளார் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹம்பல் அவர்கள் விமர்சித்துள்ளார். (நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/319)
  • என்றாலும் அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து ஷுஃபா, ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    போன்றோரும் இந்த செய்தியை அறிவித்துள்ளனர். அவர்கள், அதாவிடம் ஹதீஸை கேட்டது அவர் மூளை குழம்புவதற்கு முன் என்பதால் அவர்கள் அறிவித்தால் அந்த செய்தி சரியானது  என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே மேற்கண்ட செய்தி ஸஹீஹுன் லிகைரிஹீ என்ற வகையில் சேரும். 
  • அதனால் தான் திர்மிதீ அவர்கள், இந்த செய்தியை அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து ஷுஃபாவும், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்களும் அறிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

(பார்க்க: அஹ்மத்-2439 , 2730)

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அதாஉ பின் ஸாயிப் —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-2439 , 2730 , 3190 , 3214 , 3438 , தாரிமீ-2090 , இப்னு மாஜா-3277 , அபூதாவூத்-3772 , திர்மிதீ-1805 , இப்னு ஹிப்பான்-5245 , ஹாகிம்-7118 ,


இந்த ஹதீஸின் கருத்து:

உணவில் பரக்கத் எனும் அல்லாஹ்வின் மறைவான அருள் இறங்குமிடம் உணவுத் தட்டின் நடுப்பகுதியாகும். அங்கிருந்து முழுப்பகுதிக்கும் அது பரவுகிறது என்பதாகும்.

எனவே பரக்கத் இறங்குமிடத்திலிருந்து உண்ணவேண்டாம்; அதனால் அதுகிடைக்காமல் போய்விடும் என்று நபி (ஸல்) அவர்களே தடுத்துவிட்டதால் இதற்கு நாம் வேறுகாரணங்களை கூறத்தேவையில்லை.

(கூட்டாக உண்ணும்போது நடுவில் வைக்கப்படும் வெஞ்சனம் போன்றவை எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்றால் ஓரத்திலிருந்து சாப்பிடும்போது தான் எல்லோருக்கும் கிடைக்கும். நடுவிலிருந்து சாப்பிட்டால் சிலருக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதால் பிறர் நலன் நாடவேண்டும் என்பதால் ஓரத்திலிருந்து சாப்பிடவேண்டும் என்றும்; இதனால் அல்லாஹ்வின் பரக்கத் அதாவது அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்றும் இந்த ஹதீஸுக்கு இராகீ இமாம் அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்)

(நூல்: ஃபைளுல் கதீர்-5/58)


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.