தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3627

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருவருக்கிடையே தீர்ப்பளித்தார்கள். தீர்ப்பு யாருக்குப் பாதகமாக அமைந்ததோ அவர் திரும்பிச் செல்லும் போது அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனே சிறந்த பொறுப்பாளன் என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலட்சியப் போக்குடன் இருப்பதை அல்லாஹ் பழிக்கிறான். எனவே நீ புத்திக் கூர்மையுடன் செயல்படு. இதன் பிறகு உன்னை ஏதேனும் மிகைத்து விடுமேயானால் அப்போது அல்லாஹ்  எனக்குப் போதுமானவன். அவனே சிறந்த பொறுப்பாளன் எனக் கூறு என்று (அவரிடம்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

(அபூதாவூத்: 3627)

بَابُ الرَّجُلِ يَحْلِفُ عَلَى حَقِّهِ

حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ، وَمُوسَى بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ، قَالَا: حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ سَيْفٍ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، أَنَّهُ حَدَّثَهُمْ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بَيْنَ رَجُلَيْنِ، فَقَالَ الْمَقْضِيُّ عَلَيْهِ: لَمَّا أَدْبَرَ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يَلُومُ عَلَى الْعَجْزِ، وَلَكِنْ عَلَيْكَ بِالْكَيْسِ فَإِذَا غَلَبَكَ أَمْرٌ، فَقُلْ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3143.
Abu-Dawood-Shamila-3627.
Abu-Dawood-Alamiah-3143.
Abu-Dawood-JawamiulKalim-3145.




[حكم الألباني] : ضعيف

إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا سيف الشامي وهو مجهول الحال (جوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18934-ஸைஃப் அஷ்ஷாமீ என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…

1 . இந்தக் கருத்தில் அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23983 , அபூதாவூத்-3627 , முஸ்னத் பஸ்ஸார்-2749 , குப்ரா நஸாயீ-10387 , அல்முஃஜமுல் கபீர்-97 , 139 , குப்ரா பைஹகீ-20725 ,

2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7475 .

3 . ஸுஹ்ரீ அவர்கள் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-20724 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.