தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1151

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும். அவ்விரண்டிற்கு பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதவேண்டும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

(அபூதாவூத்: 1151)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيَّ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«التَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعٌ فِي الْأُولَى، وَخَمْسٌ فِي الْآخِرَةِ، وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-971.
Abu-Dawood-Shamila-1151.
Abu-Dawood-Alamiah-971.
Abu-Dawood-JawamiulKalim-973.




  • பெருநாள் தொழுகைளில் முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற செய்தி, அன்னை ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஸஅத் பின் ஆயித் (ரலி), ஜாபிர் (ரலி), அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி) ஆகியோர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இவற்றில் பல அறிவிப்புகள் பலவீனமானவையாக உள்ளன.

ஆனால் மேற்கண்ட அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24898-அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் யஃலா பின் கஅப் அத்தாயிஃபீ என்பவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டதை எடுத்துக் காட்டி சிலர், இவர் பலவீனமானவர் என்று வாதிடுகின்றனர். (நாம் தேடிய வரையிலும் இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    சொன்னதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியவாறு காணவில்லை)
  • (அப்படி இருந்தால்) புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் இவரைப் பற்றி கூறியதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறுவது தவறாகும். இதை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.

இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரைப் பற்றி அத்தாரீகுல் கபீர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் இவரைப் பற்றி எந்தக் கருத்தையும் கூறவில்லை. மேலும் அவர்களுடைய அத்தாரீகுஸ் ஸகீர், அல்லுஅஃபாவுஸ் ஸகீர் ஆகிய நூல்களில் நான் இக்கருத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அல்லுஅஃபாவுஸ் ஸகீர் என்ற நூலில் அப்துல்லாஹ் பின் யஃலா பின் முர்ரா அல்கூஃபீ என்பவரைப் பற்றித் தான் இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

(நூல்: மன் துகுல்லிம ஃபீஹி வஹு முவஸ்ஸகுன், பாகம் : 1, பக்கம்: 45)

  • அம்ர் பின் ஷுஐப் அவர்கள் வழியாக இவர் அறிவிப்பவை உறுதியானவையாகும். அந்த ஹதீஸ்களைப் பதிவு செய்யலாம் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    குறிப்பிட்டுள்ளதாக தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    குறிப்பிட்டுள்ளார்.

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 2, பக்கம் : 452

  • மேலும் இவரை இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் நம்பகமானவராகவே எண்ணியுள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

(பெருநாள் தொழுகையில் 7+5 கூடுதல் தக்பீர்கள் தொடர்பாக) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான், அம்ர் பின் ஷுஐப், தன் தந்தை, பாட்டனார் வழியாக அறிவிக்கும் ஹதீஸைப் பற்றி இமாம் புகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதே என்று கூறினார்கள் என்று இமாம் திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: இலலுல் கபீர், பாகம் :1, பக்கம் :190)

  • இமாம் புகாரியின் கருத்துப்படி இவர் நம்பகமானவரே என்பதை அறியலாம்.
  • இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அவர்களும் தமது ஸஹீஹ் முஸ்லிம்-4540 இல் இவருடைய ஹதீஸ்களைப் பதிவு செய்திருப்பதும் இவர் பலமானவர் என்பதை உறுதி செய்கிறது.
  • மேலும் ஹாபிழ் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் பெருநாள் தொழுகையில் 7+5 கூடுதல் தக்பீர்கள் தொடர்பாக அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் அம்ர் பின் ஷுஐப் அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தியை தனது புலுகுல் மராம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இந்தச் செய்தியை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்று கூறியதாக திர்மிதீ அவர்கள் சொன்னதையும் எடுத்துரைத்துள்ளார்கள்.

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
மற்றும் வேறு சிலர் இவரைப்பற்றி இவர், அந்தளவுக்கு (அதாவது மிக உயர்ந்த தரத்திலுள்ள அளவிற்கு) வலிமையானவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் அறிவிப்பாளர்களைப் பற்றி எடை போடுவதில் கடும் போக்கு உள்ளவர். அந்த அளவுக்கு வலிமையானவர் அல்ல என்று அவர் கூறுவது அறிவிப்பாளரின் பலவீனத்தைக் குறிக்காது.

2 . இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
இவரை நல்லவர் என்றும் இன்னொரு இடத்தில் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அவர்களின் விமர்சனத்தை நாம் விட்டுவிடலாம்.

3 . அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் மட்டுமே இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அதற்குரிய காரணத்தைக் கூறவில்லை. எனவே அதிகமானவர்கள் நம்பகமானவர்கள் என்று கூறும் கூற்றையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே பெருநாள் தொழுகைளின் கூடுதல் தக்பீர் தொடர்பாக வந்துள்ள 7+5 தக்பீர்கள் தொடர்பான நபிமொழி ஆதாரப்பூர்வமானதே! (மேற்கண்ட தகவல் சிலரின் கருத்தாகும்)

  • என்றாலும் சிலர், இந்த செய்தி நபியின் செயலாக வந்திருப்பதே மஹ்ஃபூலாகும். சொல்லாக வந்திருப்பது ஷாத் என்றும் கூறுகின்றனர். காரணம் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் யஃலா பின் கஅப் அத்தாயிஃபீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலர் நபியின் செயலாக அறிவித்துள்ளனர். முஃதமிர் மட்டுமே நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். முஃதமிர் நினைவாற்றலில் குறையுடையவர் என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    கூறியுள்ளார். இப்னு கிராஷ் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 283
    அவர்கள், இவர் நூலிலிருந்து அறிவித்தால் சரியானது. மனனத்திலிருந்து அறிவித்தால் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/117)

  • இந்த சட்டம் சரியானது என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் செயலே போதுமானதாகும்.

1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் யஃலா —> அம்ர் பின் ஷுஐப் —> ஷுஐப் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5677 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5694 , அஹ்மத்-6688 , இப்னு மாஜா-1278 , 1292 , அபூதாவூத்-1151 , 1152 , குப்ரா நஸாயீ-1817 , ஷரஹ் மஆனில் ஆஸார்-7262 , தாரகுத்னீ-1728 , 1729 , 1730 , குப்ரா பைஹகீ-6171 , 6172 ,

2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1149 .

3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-1732 .

4 . அம்ர் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-536 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.