தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2225

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 104

உயிரில்லாதவற்றின் உருவங்களை விற்பதும், விற்கத்தகாத உருவங்களும்.

 ஸயீத் பின் அபுல்ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஒருவர் வந்து, ‘அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்’ எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), ‘நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ‘யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால், வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என்றார்.

கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!’ என்றார்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ இமாம்) கூறுகிறார்:

இந்த ஒரு ஹதீஸை, நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து ஸயீத் பின் அபூஅரூபா (ரஹ்) அவர்கள் செவியேற்றுள்ளார்.

அத்தியாயம்: 34

(புகாரி: 2225)

بَابُ بَيْعِ التَّصَاوِيرِ الَّتِي لَيْسَ فِيهَا رُوحٌ، وَمَا يُكْرَهُ مِنْ ذَلِكَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الحَسَنِ، قَالَ

كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا أَبَا عَبَّاسٍ، إِنِّي إِنْسَانٌ إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي، وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لاَ أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ صَوَّرَ صُورَةً، فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا» فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً، وَاصْفَرَّ وَجْهُهُ، فَقَالَ: وَيْحَكَ، إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ، فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ، كُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: سَمِعَ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، مِنَ النَّضْرِ بْنِ أَنَسٍ، هَذَا الوَاحِدَ


Bukhari-Tamil-2225.
Bukhari-TamilMisc-2225.
Bukhari-Shamila-2225.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் அபுல்ஹஸன் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, புகாரி-2225, முஸ்லிம்-4290, …


  • இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: … அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-7042, இப்னு மாஜா-, அபூதாவூத்-, திர்மிதீ-1751, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …


  • நள்ர் பின் அனஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: … அஹ்மத்-, புகாரி-5963, முஸ்லிம்-4291, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.