பாடம் : 14 நபித் தோழர்களின் வக்ஃபு – அறக் கொடைகளும், கராஜ் நிலத்தை அவர்கள் குத்தகைக்கு விட்டதும், மற்றும் அவர்களின் பிற ஒப்பந்தங்களும்.
நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:
அதன் (ஃதமஃக் என்ற இடத்திலுள்ள பேரீச்ச மரங்களின்) அசலை (அறக் கொடையாக வழங்கி) தர்மம் செய்து விடுங்கள். அப்போது அவற்றை விற்க முடியாது. ஆனால், அதன் பழங்களை (தர்மத்திற்குச்) செலவழிக்கலாம். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே அந்த மரங்களை (அறக் கொடையாக வழங்கி) தர்மம் செய்து விட்டார்கள்.
அஸ்லம்(ரலி) அறிவித்தார்.
‘முஸ்லிம்களின் வருங்காலத் தலைமுறைகள் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களைப் பங்கிட்டதைப் போன்று நானும், நான் வெற்றி கொண்ட ஊர்களின் நிலங்களையெல்லாம் (இஸ்லாமியப் படையின் வீரர்களிடையே) பங்கிட்டு விட்டிருப்பேன்’ என்று உமர்(ரலி) கூறினார்.
Book : 41
بَابُ أَوْقَافِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَرْضِ الخَرَاجِ وَمُزَارَعَتِهِمْ، وَمُعَامَلَتِهِمْ
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: «تَصَدَّقْ بِأَصْلِهِ لاَ يُبَاعُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ» فَتَصَدَّقَ بِهِ
حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ
«لَوْلاَ آخِرُ المُسْلِمِينَ، مَا فَتَحْتُ قَرْيَةً إِلَّا قَسَمْتُهَا بَيْنَ أَهْلِهَا، كَمَا قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ»
சமீப விமர்சனங்கள்