பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதிலுள்ள தனக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும், மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தான் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும் வரை (அதாவது கனிகளைப் பறித்துக் கொள்ளும் வரை). இவ்வாறே அராயா வியாபாரம் செய் பவருக்கும் உரிமையுண்டு.
‘மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பின்னர் பேரீச்ச மரங்களை வாங்கியவர் (அந்த விளைச்சல் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவற்றின் விளைச்சல் விற்றவருக்கே உரியதாகும். செல்வம் வைத்திருக்கும் ஓர் அடிமையை வாங்கியவர், (அந்த அடிமையின் செல்வம் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே உரியதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 42
بَابُ الرَّجُلِ يَكُونُ لَهُ مَمَرٌّ أَوْ شِرْبٌ فِي حَائِطٍ أَوْ فِي نَخْلٍ
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَاعَ نَخْلًا بَعْدَ أَنْ تُؤَبَّرَ فَثَمَرَتُهَا لِلْبَائِعِ»، فَلِلْبَائِعِ المَمَرُّ وَالسَّقْيُ حَتَّى يَرْفَعَ وَكَذَلِكَ رَبُّ العَرِيَّةِ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«مَنِ ابْتَاعَ نَخْلًا بَعْدَ أَنْ تُؤَبَّرَ، فَثَمَرَتُهَا لِلْبَائِعِ إِلَّا أَنْ يَشْتَرِطَ المُبْتَاعُ، وَمَنِ ابْتَاعَ عَبْدًا وَلَهُ مَالٌ، فَمَالُهُ لِلَّذِي بَاعَهُ، إِلَّا أَنْ يَشْتَرِطَ المُبْتَاعُ»
وَعَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ فِي العَبْدِ
சமீப விமர்சனங்கள்