பாடம் : 6 கடனை அடைப்பதற்காகத் தர வேண்டிய (சிறு வயது) ஒட்டகத்திற்கு பதிலாக அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தரலாமா?
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் தன்னிடம் நபி(ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்க வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை) நோக்கி, ‘அவருக்குக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், ‘அவருக்கு நீங்கள் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது’ என்று கூறினர்.
இதைக் கேட்ட அம்மனிதர், ‘(என் உரிமையை) நிறைவாக எனக்கு அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிக்கட்டும்’ என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவருக்கு (வயது அதிகமான) அந்த ஒட்டகத்தையே கொடுத்து விடுங்கள். ஏனெனில், (தான் வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துகிறவரே மக்களில் சிறந்தவராவார்’ என்று கூறினார்கள்.
Book : 43
بَابُ هَلْ يُعْطَى أَكْبَرَ مِنْ سِنِّهِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَاضَاهُ بَعِيرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوهُ»، فَقَالُوا: مَا نَجِدُ إِلَّا سِنًّا أَفْضَلَ مِنْ سِنِّهِ، فَقَالَ الرَّجُلُ: أَوْفَيْتَنِي أَوْفَاكَ اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوهُ، فَإِنَّ مِنْ خِيَارِ النَّاسِ أَحْسَنَهُمْ قَضَاءً»
சமீப விமர்சனங்கள்