பாடம் : 9 கடனை அடைக்கும் போது (கடனாகப் பெற்ற) பேரீச்சம் பழத்திற்கோ வேறொரு தானியத்திற்கோ அதே அளவு பேரீச்சம் பழத்தை அளந்து (அல்லது எடை போட்டுக்) கொடுத்தால் அல்லது (கடன் கொடுத்தவர் சம்மதிக்கும் பட்சத்தில்) குத்து மதிப்பாகக் கணக்கிட்டுக் கொடுத்தால் அது செல்லும்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையார் (உஹுதுப் போரில் ஷஹீதாக) மரணித்துவிட்டார்கள்; ஒரு யூதருக்கு அவர் (திருப்பிச் செலுத்த வேண்டிய (கடனாக) முப்பது வஸக்கு (கனி)களை என் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார்கள். அதைத் திருப்பிச் செலுத்த எனக்கு அவகாசம் தர மறுத்துவிட்டார். எனக்காக (கால அவகாசம் கேட்டு) அந்த யூதரிடம் பரிந்துரை செய்யும்படி அல்லாஹ்வின் தூதரிடம் நான் கேட்டுக் கொண்டேன்.
இறைத்தூதர்(ஸல்), அந்த யூதரிடம் வந்து அவருக்குச் சேரவேண்டிய கடனுக்குப் பகரமாக என் பேரீச்சந் தோப்பின் கனிகளை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். அந்த யூதர் (அவ்வாறு எடுத்துக் கொள்ள) மறுத்துவிட்டார்.
எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் புகுந்து அதன் மரங்களுக்கிடையே நடந்தார்கள்.
பிறகு என்னிடம், ‘அவருக்குப் பறித்துக் கொடு. அவருக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு’ என்று கூறினார்கள். நான் இறைத்தூதர்(ஸல்) திரும்பிச் சென்ற பிறகு, பேரீச்சங் கனிகளைப் பறித்து அந்த யூதருக்கு முப்பது வஸக்குகளையும் (நிறைவாகக்) கொடுத்து விட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பதினேழு வஸக்குகள் (அளவுக்குப் பேரீச்சங் கனிகள்) மீதமாயின.
பின்னர், நான் நடந்ததைத் தெரிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதரிடம் வந்தபோது, அவர்கள் அஸர் தொழுகை தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் (ஸலாம் கொடுத்துத்) திரும்பியதும் பேரீச்சங் கனிகள் மீதமிருப்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘இச்செய்தியை கத்தாபின் குமாரரிடம் (உமரிடம்) தெரிவி’ என்று கூறினார்கள். எனவே, நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்ததும் உமர்(ரலி), ‘இறைத்தூதர் அந்தப் பேரீச்ச மரங்களுக்கிடையே நடந்து சென்றபோதே, அவற்றில் பரக்கத்து (அருள் வளம்) வழங்கப்படும் என்று அறிந்து கொண்டேன்’ என்று கூறினார்கள்.
Book : 43
بَابُ إِذَا قَاصَّ أَوْ جَازَفَهُ فِي الدَّيْنِ تَمْرًا بِتَمْرٍ أَوْ غَيْرِهِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ هِشَامٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ أَخْبَرَهُ
أَنَّ أَبَاهُ تُوُفِّيَ وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنَ اليَهُودِ، فَاسْتَنْظَرَهُ جَابِرٌ، فَأَبَى أَنْ يُنْظِرَهُ، فَكَلَّمَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَشْفَعَ لَهُ إِلَيْهِ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَلَّمَ اليَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ، فَأَبَى، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّخْلَ، فَمَشَى فِيهَا، ثُمَّ قَالَ لِجَابِرٍ: «جُدَّ لَهُ، فَأَوْفِ لَهُ الَّذِي لَهُ» فَجَدَّهُ بَعْدَمَا رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَوْفَاهُ ثَلاَثِينَ وَسْقًا، وَفَضَلَتْ لَهُ سَبْعَةَ عَشَرَ وَسْقًا، فَجَاءَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُخْبِرَهُ بِالَّذِي كَانَ، فَوَجَدَهُ يُصَلِّي العَصْرَ، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُ بِالفَضْلِ، فَقَالَ: «أَخْبِرْ ذَلِكَ ابْنَ الخَطَّابِ»، فَذَهَبَ جَابِرٌ إِلَى عُمَرَ فَأَخْبَرَهُ، فَقَالَ لَهُ عُمَرُ: لَقَدْ عَلِمْتُ حِينَ مَشَى فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُبَارَكَنَّ فِيهَا
சமீப விமர்சனங்கள்