தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2401

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு.

மேலும், வசதியுள்ளவர் (கடனைத் தீர்க்காமல்) இழுத்தடித்துக் கொண்டே சென்றால் அதற்காக அவருக்கு தண்டனை அளிப்பதும் அவரது மானத்தை வாங்குவதும் செல்லும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

(பலர் முன்னிலையில்,) நீ எனக்குத் தரவேண்டிய கடனை அடைக்காமல் இழுத்தடிக்கின்றாய் என்று கூறுவதே கடனாளியின் மானத்தை வாங்குவதாகும்; அவனைச் சிறையில் தள்ளுவதே அவனுக்குத் தரும் தண்டனையாகும் என்று சுஃப்யான் சவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

 நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு’ என்று கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 43

(புகாரி: 2401)

بَابٌ: لِصَاحِبِ الحَقِّ مَقَالٌ

وَيُذْكَرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيُّ الوَاجِدِ يُحِلُّ عُقُوبَتَهُ وَعِرْضَهُ»

قَالَ سُفْيَانُ: عِرْضُهُ يَقُولُ: مَطَلْتَنِي وَعُقُوبَتُهُ الحَبْسُ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ يَتَقَاضَاهُ، فَأَغْلَظَ لَهُ، فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ: «دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.