ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஜபலா(ரஹ்) அறிவித்தார்.
நாங்கள் மதீனாவில் இருந்தபோது எங்களைப் பஞ்சம் பீடித்தது. இப்னு ஸுபைர்(ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை (உண்ணக்) கொடுத்து வந்தார்கள். இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, ‘(இரண்டிரண்டாகச்) சேர்த்து உண்ணாதீர்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தன் சகோதரருக்கு அனுமதி தந்தாலே தவிர சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்’ என்று கூறினார்கள்.
Book :47
حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، قَالَ: كُنَّا بِالْمَدِينَةِ، فَأَصَابَتْنَا سَنَةٌ، فَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ
وَكَانَ ابْنُ عُمَرَ يَمُرُّ بِنَا فَيَقُولُ: «لاَ تَقْرُنُوا، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الإِقْرَانِ، إِلَّا أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ»
சமீப விமர்சனங்கள்