பாடம் : 5 கூட்டாளிகளிடையே பொருள்களுக்கு ஒத்த விலையை நிர்ணயித்தல்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையில் தனக்குரிய பங்கை விடுதலை செய்பவர், தன்னிடம் அவ்வடிமையின் (சந்தை விலைக்கு) ஒத்த விலை (அளவிற்குப் பணம்) இருந்தால் (அதைக் கொடுத்து) அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்யட்டும். இல்லையெனில், அவர் விடுதலை செய்த அளவுக்கு மட்டுமே அவ்வடிமை சுதந்திரவானாவான். ‘ என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) அவர்களின் மாணவர் நாஃபிஉ(ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவித்த அய்யூப்(ரஹ்), ‘இல்லையெனில் எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கு மட்டுமே அவ்வடிமை சுதந்திரவான் ஆவான்’ என்னும் வாசகம் நாஃபிஉ(ரஹ்) அவர்களின் சொல்லா அல்லது நபி(ஸல்) அவர்களின் ஹதீஸின் ஒரு பகுதியா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்கள்.
Book : 47
بَابُ تَقْوِيمِ الأَشْيَاءِ بَيْنَ الشُّرَكَاءِ بِقِيمَةِ عَدْلٍ
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ أَعْتَقَ شِقْصًا لَهُ مِنْ عَبْدٍ، أَوْ شِرْكًا، أَوْ قَالَ: نَصِيبًا، وَكَانَ لَهُ مَا يَبْلُغُ ثَمَنَهُ بِقِيمَةِ العَدْلِ فَهُوَ عَتِيقٌ، وَإِلَّا فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ “، قَالَ: لاَ أَدْرِي قَوْلُهُ: عَتَقَ مِنْهُ مَا عَتَقَ، قَوْلٌ مِنْ نَافِعٍ أَوْ فِي الحَدِيثِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
சமீப விமர்சனங்கள்